மன்னராக முடிசூடும் சார்லஸ்… வேலையை இழக்கும் அபாயத்தில் ஊழியர்கள் 100 பேர்


கிளாரன்ஸ் ஹவுஸ் மாளிகையில் பணியாற்றிய ஊழியர்கள் 100 பேர்கள் வேலையில் இருந்து நீக்கம்

சார்லஸ் பக்கிங்ஹாம் அரண்மனையில் குடிபெயர இருப்பது ஊழியர்கள் வேலையை இழக்கும் நிலை

மன்னர் சார்லஸின் ஊழியர்கள் பலர் வேலையை இழக்கும் அபாயம் இருப்பதை தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கிளாரன்ஸ் ஹவுஸ் மாளிகையில் பணியாற்றிய ஊழியர்கள் 100 பேர்கள் வரையில் வேலையில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மாளிகையில் இதுவரை சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா தங்கியிருந்தனர்.

மன்னராக முடிசூடும் சார்லஸ்... வேலையை இழக்கும் அபாயத்தில் ஊழியர்கள் 100 பேர் | Charles Staff Face Redundancy

@getty

ஆனால், ராணியார் காலமானதை அடுத்து, சார்லஸ் மன்னராக முடிசூட இருப்பதும், அவர் பக்கிங்ஹாம் அரண்மனையில் குடிபெயர இருப்பதும் ஊழியர்கள் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சார்லஸ் மன்னராக முடிசூடும் அளவுக்கு, அவருக்கான அனைத்து பணிகளையும் இந்த ஊழியர்களே செய்து முடித்துள்ளனர்.
தற்போது வேலையை இழக்கவிருக்கும் ஊழியர்களில் தனிப்பட்ட செயலாளர்கள், நிதி பராமரிப்பு அதிகாரிகள், மக்கள் ஊடக பிரிவு அதிகாரிகள் மற்றும் வீட்டில் பணியாற்றும் ஊழியர்கள் என கூறப்படுகிறது.

மன்னராக முடிசூடும் சார்லஸ்... வேலையை இழக்கும் அபாயத்தில் ஊழியர்கள் 100 பேர் | Charles Staff Face Redundancy

@getty

எடின்பர்க் நகரில் அமைந்துள்ள புனித கைல்ஸ் பேராலயத்தில் நன்றி அறிதல் சேவை ஒன்று முன்னெடுக்க பின்னர், தங்களின் பணி பறிபோவதாக அவர்கள் உணர்ந்தனர் என கூறப்படுகிறது.

சிலர், தங்களை மன்னர் பக்கிங்ஹாம் அரண்மனையில் பணிக்கு அமர்த்துவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுவரை அவ்வாறான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடிதத்தில், தலைமையின் பொறுப்பில் மாற்றம் வரும் போது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையிலும் மாற்றம் வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னராக முடிசூடும் சார்லஸ்... வேலையை இழக்கும் அபாயத்தில் ஊழியர்கள் 100 பேர் | Charles Staff Face Redundancy

@getty

மேலும், கிளாரன்ஸ் ஹவுஸ் மாளிகை மிக விரைவில் மூடப்படும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, குறிப்பிட்ட ஒரு சில ஊழியர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்பட இருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு மாளிகையில் வேலை இழப்பை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு வேறு அரச குடும்பத்தில் வாய்ப்பளிக்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.