மருந்து தட்டுப்பாடே இல்லை போலியாக வதந்திகளை பரப்புவது ஏன்? அமைச்சர் காட்டம்

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறி அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். அதனைதொடர்ந்து மகப்பேறு உதவி வழங்கும் திட்டம், பிறப்பு சான்றிதழ், சக்கர நாற்காலி உள்ளிட்டவைகளை 25 பயணாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினார்கள். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது போலியாக பரப்பப்படும் கற்பனை என்று தெரிவித்தார்.

உதவி வழங்கிய பிறகு, மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மக்களை தேடி மருத்துவம் என்னும் திட்டம், முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டதை குறிப்பிட்டார். முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட  இந்தத் திட்டத்தின் மூலம் தற்போது வரை 88  லட்சத்து 49 ஆயிரத்து 508 பயனாளர்களுக்கு மருத்துவ பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

மேடையில் பேசிய பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகத்தில் 4308 மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பாணியாளர்களை MRB மூலம் நிறப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். அக்டோபர் மாத இறுதிக்குள் காலியாக இருக்கும் 4308 மருத்துவ களப்பணியாளர்களின் பணியிடங்கள் நிறப்பப்படும் என்ற தகவலையும் தெரிவித்தார்.

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பதே இல்லை என்றும் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக கூறுவது போலியானது என்று வலுவாக கூறிய அவர், இது தொடர்பாக கற்பனையாக வதந்திகள் பரப்ப படுகிறது என்று வருத்தம் தெரிவித்தார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.