சென்னை: ஏற்கனவே அந்த பிரம்மாண்டத்தை படாதபாடு படுத்தியதால் தான் நடிக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் அந்த காமெடி நடிகர்.
இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இன்னும் முழுசா ஒரு படம் கூட வெளியே வரவில்லை, அதற்குள் அவரது ஆட்டம் அதிகரித்து வருவதாக ஏகப்பட்ட புகார்கள் எழுந்துள்ளன.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்கிற பழமொழியை மட்டும் சொல்லி, இஷ்டத்துக்கு தயாரிப்பாளர்களை டரியல் ஆக்கி வருகிறார் அந்த காமெடி நடிகர் என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
காமெடி நடிகர் ரிட்டர்ன்ஸ்
காமெடி நடிகருக்கு சில காலம் எண்டு கார்டு போட்டு மூலையில் உட்கார வைத்த நிலையில், அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து விட்டு மீண்டும் அதிரடி காட்ட களத்தில் குதித்துள்ளார். ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து முடிக்கும் முன்பே ஏகப்பட்ட படங்களில் எல்லாம் கையெழுத்துப் போட்டு காசு பார்த்து வருகிறார்.

வாய்ப்புகள் குவியுது
காமெடி நடிகருக்கு சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட செல்வாக்கு உள்ள நிலையில், மீண்டும் அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் பிச்சிக்கிட்டு போகும் என தயாரிப்பாளர்களே நினைத்துக் கொண்டு இஷ்டத்துக்கு அவருக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்க ஆரம்பித்தனர். வரலக்ஷ்மியை ஏன் வேண்டாம்னு சொல்லணும்னு நினைத்த அவரும் அனைத்து அட்வான்ஸ்களையும் வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஆளுக்கொரு கால்ஷீட் கொடுத்து தலையை காட்டி விட்டு வந்து விடுகிறாராம்.

5 கோடி பத்தாதுப்பா
ஏற்கனவே ஹீரோவாக கமிட் ஆன படத்தையே முடிக்காத அந்த நடிகர் அடுத்ததாக இன்னொரு படத்தில் அவசர அவசரமாக ஹீரோவாக ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஆனால், அதற்கு பிறகு தான் இவர் தனது சுயரூபத்தை காட்டத் தொடங்கியதும் தயாரிப்பாளருக்கு தலையே சுற்றி விட்டதாம். மார்க்கெட்டே இல்லாமல் மீண்டும் சில லட்சங்களுக்கு நடிக்க வந்த அந்த நடிகர் ஒரேயடியாக அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க 5 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கேட்பதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

தயாரிப்பாளர் தலையில் துண்டு
இந்த நடிகர் ஹீரோவாக நடித்துள்ள அந்த படமே இன்னும் வெளியே வரவில்லை. அது வெளியே வந்து ஓடுதா? இல்லை ஓட்டம் பிடிக்குதா? என்பதை பார்த்து விட்டு இவரை வைத்து படம் பண்ணலாம் என சும்மா பேசப் போன தயாரிப்பாளரை கோழி அமுக்குவது போல ஒரே அடியாக அமுக்கி அக்ரீமெண்டில் கையெழுத்து வாங்கி விட்டாராம், இப்போ இப்படி சம்பளத்தையும் உயர்த்தினால் தான் என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லையே என தயாரிப்பாளர் படத்தை எடுப்பதற்கு முன்பாகவே தலையில் துண்டு போட்டு புலம்பி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.