சமீபத்திய காலமாகவே மூன்லைட்டிங் என்பது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. ஐடி நிறுவனங்கள் பலவும் இது குறித்து தங்கள் கருத்துகளை விவாதித்து வருகின்றன.
முன்னதாக இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களும், மூன்லைட்டிங் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றன.
தற்போது சர்வதேச டெக் ஜாம்பவான் ஆன ஐபிஎம் நிறுவனமும் மூன் லைட்டிங்குக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது.
சீனா வேண்டாம்.. இந்தியாவை தேடி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் – நிர்மலா சீதாராமன்
ஐபிஎம் எச்சரிக்கை
இது குறித்து ஐபிஎம் நிறுவனம், மூன்லைட்டிங் என்ற இரட்டை வேலை வாய்ப்பு முறையானது சரியானது அல்ல, அத்தகைய நடவடிக்கையை நிறுவனம் ஊக்குவிப்பதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து ஐபிஎம் இந்தியாவின் நிர்வாக இயக்குனரான சந்தீப் படேல், நாட்டின் ஒட்டுமொத்த தொழில் துறையினரின் நிலை இது தான் என்று கூறியுள்ளார்.
முழு நேரமாக பணி புரிவோம்
எங்கள் தொழிலாளர்கள் அனைவரும் வேலை செய்யும்போது, ஐபிஎம்மில் முழு நேரமாக வேலை செய்ய போகிறோம் என கையெழுத்திடுகிறார்கள். எனவே மூன்லைன்ட்டிங் என்பது சரியானது அல்ல என இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தான் எங்களின் நிலைப்பாடு. நீங்கள் ஏற்கனவே தொழில் துறையில் உள்ள நிலையை அறிந்திருப்பீர்கள் என்றும் படேல் தெரிவித்துள்ளார்.
இன்ஃபோசிஸ் எச்சரிக்கை
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு இன்ஃபோசிஸ் நிறுவனம் மூன்லைட்டிங்-கினை நிறுவனம் அனுமதிக்காது என தெரிவித்திருந்தது. நிறுவனத்தின் ஒப்பந்த விதிகளை மீறினால் வேலையை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஊழியர்களை டெர்மினேட் செய்ய வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
விப்ரோ
விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி வழக்கமான வேலையைத் தவிர, இரண்டாவது வேலை என்பது தெளிவான மற்றும் எளிமையான ஏமாற்று வேலை என்று கூறினார்.
ஸ்விக்கி
ஸ்விக்கி போன்ற சில ஸ்டார்ட் அப்கள் மற்றும் யூனிகார்ன்கள் முதல் மூன்லைட்டிங் பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறியது. இது அலுவலக நேரங்களுக்கு வெளியே அல்லது வார இறுதி நாட்களில் முழு நேர வேலையில் அவர்களின் உற்பத்தி திறனை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்றும் ஒரு அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Opinion against IBM India moonlighting: it’s says not ethically right for full time employees
IBM india has made it clear that moonlighting is not ethically right and the company does not encourage such practice