ராகுல் காந்தி நாளை திடீர் ஓய்வு..! – கேரளாவில் நாளை காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்..?

தேச ஒற்றுமை பயணம் எனும் பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளதால், நாளை அவர் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘தேச ஒற்றுமை பயணம் ’ என்ற பெயரில் பாத யாத்திரையை மேற்கொள்கிறார்.நாடு முழுவதும் 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்கள் 3, 570 கிலோ மீட்டர் தூரத்திற்கு யாத்திரையை மேற்கொள்கிறார்.இந்த யாத்திரையானதுதிருவனந்தபுரம், கொச்சி, நிலம்பூர், மைசூரு, பெல்லாரி, ராய்ச்சூர், விக்ரபாத், ஜல்கயோன், இந்தூர், ஆழ்வார், டெல்லி, அம்பாலா, பதான்கோட், ஜம்மு சென்று ஸ்ரீ நகரில் முடிவடைகிறது. இதில் ராகுல் காந்தியுடன்காங்கிரஸ் தலைவர்களும் நடைபயணம் மேற்கொள்கின்றனர்.
கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியகொடியை வழங்கி நடை பயணத்தை தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் 4 நாட்கள் நடைபெற்ற ராகுலின் நடை பயணம் 10ம் தேதியுடன் நிறைவுபெற்றது.கடந்த 11-ந் தேதி முதல் கேரள மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல், நேற்று அவர் திருவனந்தபுரம், கணியாபுரத்தில்பாதயாத்திரையை தொடங்கினார்.கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தொண்டர்களுடன் தொடர்ந்து நடந்த ராகுல், இரவு 8 மணி அளவில் கல்லம்பலத்தில் நிறைவு செய்தார்.அங்கு இரவு அனைவரும் ஓய்வெடுத்துக் கொண்டனர்.

பின்னர் இன்று காலை 7.30 மணிக்கு கல்லம்பலத்தில் இருந்து மீண்டும் 8வது நாள் பாதயாத்திரையை ராகுல்தொடங்கினர். முதல் நிகழ்ச்சியாகசிவகிரி மடத்திற்குசென்ற அவருக்கு, கோவில் நிர்வாகிகள் உற்சாகவரவேற்பளித்தனர். அங்கு, சமூக சீர்திருத்த வாதியும், துறவியுமான ஸ்ரீநாரயணகுருவுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய ராகுல் காந்தி, இந்து மதத்தின் பிரதான வார்த்தை ஓம் சாந்தி தான், ஆனால் இந்துக்களின் காவலன் என்று கூறிகொள்ளும் கட்சி, ஓம் சாந்தி என்ற வார்த்தைக்கு எதிராக நடந்து கொள்வதாக கூறினார். மேலும், அவர்கள் மதநல்லிணக்கத்தை கெடுப்பது, ஒற்றுமையை சீர்குலைப்பது, மக்களை பிளவுபடுத்துவது போன்ற செயல்களை செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.அத்துடன் மக்களை ஒன்றுபடுத்தவே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறினார்.
தற்போதுகொல்லம் மாவட்ட எல்லையான கடம்பாட்டு கோணத்தில் யாத்திரை நிறைவு பெற்றிருக்கிறது.ஓய்வுக்குப் பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும்யாத்திரை தொடங்கவுள்ளது.ராகுல் காந்தி தொடர்ந்து 8 நாட்களாகநடந்து வருவதால் அவரது கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, காலில் கொப்புளங்கள் ஏற்பட்டாலும் எனது ஒற்றுமை பயணம் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம், ராகுல் காந்தி நாளை ஓய்வெடுக்க உள்ளதாகபாதயாத்திரை குழுவினர் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி நாளை ஓய்வு எடுக்கும் நிலையில் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நாளை கேரளாவில் நடைபெறும் என்று எதிர்பார்கபடுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.