ரூ.200 கோடி மதிப்பிலான 7 ஸ்டார் ரிசார்ட் இடிப்பா? இன்னொரு நொய்டா நடவடிக்கை!

ரூ.200 கோடி மதிப்பிலான கேரளாவில் உள்ள ஆடம்பரமான 7 நட்சத்திர ரிசார்ட் CRZ விதிகளை மீறியதற்காக இடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டியதால் 7 ஸ்டார் ரிசார்ட் கட்டிடம் ஒன்று இடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நொய்டாவில் இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட நிலையில் அதே போன்ற ஒரு சம்பவம் விரைவில் கேரளாவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது மட்டும் நடந்தா போதும்.. பல பொருட்கள் விலை குறையும்.. அனில் அகர்வால் செம அப்டேட்!

அரசு புறம்போக்கு நிலம்

அரசு புறம்போக்கு நிலம்

கபிகோ கேரளா ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அரசு பொரம்போக்கு நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்ததாக குற்றஞ்சாட்டிய நிலையில் கேரள அரசு சமீபத்தில் அந்த நிலத்தை கையகப்படுத்தியது.

இடிக்கும் பணி

இடிக்கும் பணி

ரிசார்ட் குழுவால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்திய ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜா, அந்த நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிப்பதற்கான செயல் திட்டத்தை நிர்வாகம் உள்ளூர் பஞ்சாயத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த செயல் திட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் இறுதி ஒப்புதல் அளித்த பிறகு ஒரு வாரத்தில் அந்த ரிசார்ட்டை இடிக்கும் பணி தொடங்கும் என்று கூறப்படுகிறது

ஆடம்பர வில்லாக்கள்
 

ஆடம்பர வில்லாக்கள்

கையகப்படுத்தப்பட்ட 7 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இடம் பனவல்லி கிராம ஊராட்சிக்கு உட்பட்டது என்றும், இதில் 54 ஆடம்பரமான வில்லாக்கள் கடந்த 2007ஆம் கட்டப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வில்லாக்களின் இன்றைய மதிப்பு ரூ.200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு

நீதிமன்ற உத்தரவு

இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு இந்த கட்டிடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

கொச்சி அடுக்குமாடி கட்டிடம்

கொச்சி அடுக்குமாடி கட்டிடம்

முன்னதாக 2020 ஆம் ஆண்டில், கேரளாவில் உள்ள கொச்சியில் வேம்பநாடு உப்பங்கழிக்கு அருகில் உள்ள நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதற்காக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி இடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Luxurious 7-star Resort In Kerala Worth Rs 200 Crore To Be Razed Over CRZ Violations

Luxurious 7-star Resort In Kerala Worth Rs 200 Crore To Be Razed Over CRZ Violations

Story first published: Wednesday, September 14, 2022, 19:18 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.