லிப்ஸ்டிக் இன்டெக்ஸ்.. பொருளாதார சரிவின் ஆரம்பமா..?!

உலகம் முழுவதும் பணவீக்கம் உயர்வுக்குக் கச்சா எண்ணெய் விலை தான் முக்கியக் காரணம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் அமெரிக்காவின் ஆகஸ்ட் மாத பணவீக்க உயர்வு சில முக்கிய உண்மைகளைக் கூறியுள்ளது.

எரிபொருள் மட்டும் அல்லாமல் பெரும்பாலான நுகர்வோர் பொருட்களின் விலை உலக நாடுகளின் மத்திய வங்கிகள் பல முறை வட்டி விகிதத்தை உயர்த்தியும் அதிகரித்து விலைவாசி அதிகரித்துப் பணவீக்கமும் உயர்ந்துள்ளது.

இப்படியிருக்கையில் தான் லிப்ஸ்டிக் இன்டெக்ஸ் திரும்பியுள்ளது.

முழு நேர ஊழியர்கள் இது சரிவராது.. மூன் லைட்டிங்-க்கு எதிராக குரல் கொடுக்கும் ஐபிஎம்!

பொருளாதார மந்தநிலை

பொருளாதார மந்தநிலை

2001 ஆம் ஆண்டுப் பொருளாதார மந்தநிலையின் போது Estee Lauder Cos இன் தலைவரான Leonard Lauder என்பவரால் லிப்ஸ்டிக் இன்டெக்ஸ் என்ப சொல் வார்த்தை உருவாக்கப்பட்டது. பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட 2021 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் லிப்ஸ்டிக் விற்பனை திடீரென அதிகரித்தது.

லிப்ஸ்டிக் இன்டெக்ஸ்

லிப்ஸ்டிக் இன்டெக்ஸ்

நிச்சயமற்ற பொருளாதாரச் சூழ்நிலையில் அனைத்து பொருட்களும் விலைவாசி அதிகரிக்கும் வேளையில் பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்கள் மலிவாக இருந்த காரணத்தால் பெண்களுக்கு விருந்தாக இருந்தது. இதனாலேயே லிப்ஸ்டிக் இன்டெக்ஸ் உருவாக்கப்பட்டது.

பவுண்டேஷன் இன்டெக்ஸ்
 

பவுண்டேஷன் இன்டெக்ஸ்

2001 பொருளாதார மந்தநிலை தொடர்ந்து 2008-2009 நிதி நெருக்கடி பவுண்டேதான் குறியீடு உருவானது. இந்த மோசமான பொருளாதாரக் காலத்தில் பெண்கள் லிப்ஸ்டிக் காட்டிலும் அப்போது டிரெண்டாக இருந்த பவுண்டேஷன் பவுடர் விற்பனை அமோகமாக இருந்த காரணத்தால் பவுண்டேஷன் இன்டெக்ஸ் உருவானது.

லிப்ஸ்டிக் விற்பனை

லிப்ஸ்டிக் விற்பனை

இந்த நிலையில் உலக நாடுகளில் பொருளாதார மந்தநிலை அச்சம் அதிகரித்திருக்கும் வேளையிலும், மக்கள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரும் நிலையில் மாஸ்க் அணிவோர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் லிப்ஸ்டிக் விற்பனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சூடுபிடித்துள்ளது.

ஐரோப்பா

ஐரோப்பா

ஐரோப்பிய சந்தையில் ஜனவரி – ஜூலை 2022 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் லிப்ஸ்டிக் விற்பனை மற்ற அனைத்து அழகு சாதன பொருட்களைக் காட்டிலும் அதிகளவில் விற்பனையாகியுள்ளது. லிப்ஸ்டிக்-ஐ தொடர்ந்து லிப் கேர், பேஸ் காஸ்மெட்டிக்ஸ், நெயில் பாலிஷ், போன்வற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.

பேஸ் மாஸ்க்

பேஸ் மாஸ்க்

இதேபோல் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பேஸ் மாஸ்க் விற்பனை இந்த 6 மாதத்தில் குறைந்துள்ளது என ஐரோப்பிய சந்தை தரவுகள் கூறுகிறது. பொருளாதாரச் சரிவு அல்லது மந்த நிலையில் ஏன் அழகு சாதன பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

அழகு சாதன பொருட்கள்

அழகு சாதன பொருட்கள்

பொருளாதார மந்த நிலையில் நுகர்வோர் நம்பிக்கை சரிந்தாலும், அழகு சாதன பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அழகு சாதன பொருட்களின் உற்பத்தி செலவு மிகவும் குறைவு, இதேபோல் குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும்.

நுகர்வோர்

நுகர்வோர்

இந்தக் காரணத்தால் ஒப்பனை பொருட்களின் விலையில் இந்தப் பொருளாதார மந்த நிலையில் பெரிய அளவில் மாறாமல் இருக்கும் காரணத்தால் நுகர்வோர் மத்தியில் மிகவும் விரும்பத்தக்கதாக உள்ளது.

2 சதவீதம்

2 சதவீதம்

உதாரணமாக அமெரிக்காவில் ஜனவரி முதல் ஆகஸ்ட் 27 வரையில் அழகு சாதன பொருட்களின் விலை வெறும் 2 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், இக்காலகட்டத்தில் அமெரிக்காவின் சராசரி பணவீக்கம் 10.9 சதவீதமாக உள்ளது. இந்த விலை வித்தியாசம் தான் பொருளாதார மந்த நிலையிலும் அழகு சாதன பொருட்களின் விற்பனை அதிகரிக்க உள்ளது.

பொருளாதாரச் சரிவின் ஆரம்பமா..?!

பொருளாதாரச் சரிவின் ஆரம்பமா..?!

இந்நிலையில் தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய சந்தையில் லிப்ஸ்டிக் விற்பனை அதிகரித்துள்ளதால் சந்தை வல்லுனர்கள் பொருளாதாரச் சரிவின் ஆரம்பமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Lipstick Index is back on trending; Is this sign of Economic slowdown

Lipstick Index is back on trending; Is this sign of Economic slowdown லிப்ஸ்டிக் இன்டெக்ஸ்.. பொருளாதாரச் சரிவின் ஆரம்பமா..?!

Story first published: Wednesday, September 14, 2022, 18:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.