மைசூரு : மைசூரு தசராவை முன்னிட்டு நடக்கும் மணல் சிற்ப கண்காட்சியில், வீர் சாவர்க்கர் மணல் சிற்பம் வைக்கும் கர்நாடக கண்காட்சி ஆணையம் முடிவுக்கு, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மைசூரு தசரா விழாவை முன்னிட்டு, கர்நாடகா கண்காட்சி ஆணையம், மணல் சிற்பம் வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.
இதன்படி, தசரா துவங்கும் நாள் முதல் மூன்று மாதங்களுக்கு இந்த மணல் சிற்ப கண்காட்சி, அரண்மனை எதிரில் உள்ள தொட்டகரே மைதானத்தில் இடம் பெற்றிருக்கும்.நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர அமுத பெருவிழாவை ஒட்டி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், அம்பேத்கர், மகாத்மா காந்தி.வீர் சாவர்க்கர், மறைந்த நடிகர் ராஜ்குமார், அவரது மனைவி பார்வதம்மா, நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோரின் முழு உருவ மணல் சிற்பங்களை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வீர் சாவர்க்கரின் சிற்பம் வைக்க, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.வீர் சாவர்க்கர் மணல் சிற்பம் வைக்கும் எண்ணம், பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் ஹெக்டேவர் பேச்சு பதிக்கப்பட்டது தொடர்பாக மாநில அரசுக்கும், காங்கிரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.அதன்பின்னரே, மணல் சிற்ப யோசனையில், வீர் சாவர்க்கர் சிலை வடிவமைக்கும் எண்ணம் தோன்றியதாக, ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement