சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம்.
இந்தப் படம் செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாகவும் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் டீசர், 3 பாடல்கள் மற்றும் ட்ரெயிலரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பொன்னியின் செல்வன் படம்
நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

மணிரத்னத்தின் கனவு
இந்தப் படம் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு பிராஜக்டாக இருந்த நிலையில், முன்னதாக விஜய், மகேஷ் பாபு, விக்ரம் உள்ளிட்டவர்களை வைத்து இந்தப் படத்தை கடந்த 2011லேயே திட்டமிட்டார் மணிரத்னம். இதுபோல இவரது இரண்டு முயற்சிகள் செயல்படுத்தப்படாத நிலையில் தற்போது தன்னுடைய மூன்றாவது முயற்சியில் இந்தப் படத்தை சாத்தியப்படுத்தியுள்ளார்.

இரண்டு பாகங்கள்
இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படத்தை வெறுமனே 155 நாட்களில் இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம். இத்தகைய பிரம்மாண்டமான படத்தை எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் அவர் இயக்கினார் என்பது குறித்து பலரும் வியப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தின் மற்றும் கதையின் மீதான காதல் இதை சாத்தியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த வெளியீடுகள்
இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை முன்னதாக பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டன. மேலும் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன.

3வது பாடல் வெளியானது
நேற்றைய தினம் படத்தின் 3வது பாடலையும் லிரிக் வீடியோவாக மெட்ராஸ் டாக்கிஸ் வெளியிட்டுள்ளது. படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீசும் தயாரித்துள்ளது. இன்னும் இரு வாரங்களில் இந்தப் படம் ரசிகர்களை சந்திக்கவுள்ள நிலையில் தற்போது படத்தின் ரன் டைம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

படத்தின் ரன்டைம்
படத்தின் முதல் பாதி 1 மணிநேரம் மற்றும் 21 நிமிடங்களும் இடைவேளைக்கு பிறகான இரண்டாவது பாதி 1 மணிநேரம் 25 நிமிடங்களுக்கும் ஓடவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் அதிக நேரம் ரசிகர்களை ஒரேயிடத்தில் உட்கார வைக்கும் வரலாற்றுப் படங்கள் முயற்சிக்கும் நிலையில் இந்தப் படத்தின் 2 மணிநேரம் 46 நிமிடங்கள் ரன்டைம் ரசிகர்களின் பேவரிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

நீளம் ரசிகர்களை கவராது
சமீபத்தில் வெளியான விக்ரமின் கோப்ரா படத்திலும் அதிகப்படியான நீளம் விமர்சனங்களுக்கு உள்ளானது. இதையடுத்து 20 நிமிடங்கள் படத்தின் நீளம் குறைக்கப்பட்டது. இந்நிலையில் இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக படத்தை கொடுக்க முயலும் மணிரத்னத்தின் முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.