ஹர்ஷா இன்ஜினியர்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் (HEIL) அகமதாபாத்தினை தலைமையிடமாகக் கொண்டு செயபட்டு வரும் நிறுவனமாகும். இதன் பொது பங்கு வெளியீடானது இன்று தொடங்கியுள்ளது.
இந்த பங்கு வெளியீடானது செப்டம்பர் 16 அன்று முடிவடையவுள்ளது.
பேரிங் கேஜ் நிறுவனமான இதன் பங்கு வெளியீட்டின் மூலம் 455 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளது. இதில் பங்குதாரர்களாக உள்ள முதலீட்டாளர்கள் மூலம் 300 கோடி ரூபாய் வரையில் பங்குகளை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹர்ஷா இன்ஜினியர்ஸ் செப்டம்பர் 14 அன்று ஐபிஓ.. சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு!

ஐபிஓ விலை
ஹர்ஷா இன்ஜினியர்ஸ் நிறுவனம் அதன் பங்கு வெளியீட்டில் 314 – 330 ரூபாயாக பங்கு விலையினை நிர்ணயம் செய்துள்ளது. இந்த மொத்த பங்கு வெளியீட்டில் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு 35% பங்கும், 15% நிறுவனமற்ற முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆஃபர் ஃபார் சேல்
இந்த ஆஃபர் ஃபார் சேல் மூலம் நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பரதார்கள் குழுக்கள், ராஜேந்திரா ஷா, ஹரிஷ் ரங்வாலா மற்றும் நிர்மலா ஷா உள்ளிட்டோர் பங்குகளை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்கு வெளியீட்டில் OFS மூலம் தகுதியுள்ள ஊழியர்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதற்காக இந்த வெளியீடு?
இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது அதன் கடனை அடைக்க பயன்படுத்தப்படும் எனவும், நிறுவனத்தின் வளர்ச்சியினை மேம்படுத்த மூலதனமாக பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெஷினரி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், உற்பத்தி வசதியினை மேம்படுத்தல் என பலவற்றையும் சீரமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கிரே மார்கெட் நிலவரம்?
இந்த நிறுவன பங்கின் விலையானது கிரே மார்கெட்டில் 210 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இந்த பங்கானது செப்டம்பர் 26 அன்று என் எஸ் இ மற்றும் பி எஸ் இ-யில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ரது.

லாட் சைஸ்?
இந்த வெளியீட்டில் முதலீட்டாளர்கள் 45 ஈக்விட்டி பங்குகளும், அதன் பிறகு 45ன் மடங்கிலும் வாங்கலாம். அதிகபட்ச விலையில் வாங்கினால் கூட ஒருவர் 14,850 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான வருவாய் விகிதம் இந்தியாவுக்கு வெளியே இருந்து வருகின்றன. மூலோபாய ரீதியாக அமைந்துள்ள உற்பத்தி வசதிகள், சந்தையில் உள்ள செலவினங்கள் உள்ளிட்ட பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தியாவில் தொடர்ந்து அதன் வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றது.

லாபம் இருமடங்கு வளர்ச்சி
இதற்கிடையில் கடந்த நிதியாண்டில் இதன் வருவாய் விகிதம் 51.24% அதிகரித்து, 1321.48 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வரிக்கு பிந்தைய இதன் லாபமும் இருமடங்கு அதிகரித்து, 91.94 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் எதிர்கால வளர்ச்சி இரு இலக்கில் இருக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்க்கப்படும் நிலையில், இது சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
Harsha engineers IPO to opens today: do you know price band, other key details
Harsha Engineers International’s IPO started today. The share issue will close on September 16. It has fixed the share price at Rs 314-330 in its share issue.