1098 சைல்டுலைன் எண் தொடரும்: மத்திய அரசு விளக்கம்

டெல்லி: குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கான 1098 சைல்டு ஹெல்ப்லைன் எண் சேவை தொடரும் என நாளிதழில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

“Centre hanging up on 1098; Children will have to call 112” என்ற தலைப்பில் இன்று (செப்டம்பர் 14) பத்திரிக்கையில் செய்தி ஒன்று வெளியானது. அதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்.

“மத்திய அரசு குழந்தைகள் உதவி எண் (1098) 112 என்ற அனைத்துவிதமான அவசர அழைப்புகளுக்கான எண்ணுடன் இணைக்க இருக்கிறது. 112 இந்தியா செயலியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள், சிடாக் என்ற மத்திய உயர்கணினி மேம்பாட்டு மையம் உதவியுடன் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது” என மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் துணைச் செயலர் மனோஜ் குமார் கடந்த 12ஆம் தேதி எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். அதை மேற்கோள் காட்டியே செய்தி வெளியிடப்பட்டது.

>>அந்த செய்தியை வாசிக்க…

இந்நிலையில், அதற்கு மத்திய அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் வசம் அதுமாதிரியான திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.

சிறார் நீதிச் சட்டம் 2015-இன் கீழ் இந்த எண் தொடர்ந்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண் மூலம் தொடர்பு கொள்ளும் குழந்தைகளுக்கு தேவையான உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதோடு சேர்த்து…

  • 1098-க்கு எஸ்எம்எஸ் வசதி.
  • தொலைபேசி அழைப்பு (கால்) டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் கால் கான்பரன்ஸ்.
  • வாய்ஸ் கான்வர்சேஷனின் டிஜிட்டல் பதிவு.
  • அழைப்பவரின் இருப்பிடத்தை அடையாளம் காணுதல்.
  • சேவை குறித்த கருத்து பின்னூட்டம் சார்ந்த மெக்கானிசம்.
  • GIS மேப் துணை கொண்டு குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் இடத்தை அடையாளம் காணுதல்.

முதலிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22 காலகட்டத்தில் சுமார் 54.6 லட்சம் அழைப்புகள் 1098-இல் பதிவாகி உள்ளது.

இப்போதைக்கு இந்த 1098 சேவை நாட்டின் மொத்தமுள்ள 750-க்கும் மாவட்டங்களில் 603 மாவட்டங்களுக்கு மட்டுமே கிடைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூரத்தில் வாடும் குழந்தைகளை அணுக 60 நிமிடங்கள் வரை ஆவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாகும் அழைப்புகள் அனைத்தும் மேனுவல் என்ட்ரியாக குறிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை, தீயணைப்பு, ஆம்புலன் போன்ற அவசர கால அவசர கால சேவை துறைகளுடன் இணைந்து இயங்குவதில் சிக்கல் உள்ளது. அதற்கு புதிய சிஸ்டத்தின் மூலம் தீர்வு காணப்படும்.

குழந்தைகள் உதவி எண் 1098 அமைச்சகத்தால் தொடர்ந்து நிர்வகிக்கப்படும். ERSS 112 உடனான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு சேவையை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 112 எண்ணுக்கு குழந்தைகள் அழைத்தாலும் அது சைல்டு ஹெல்ப்லைனுக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டுதல்கள் அமைச்சகத்தில் செயலாக்கத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.