கொங்கு மண்டலத்தில் புரட்சிப் பயணம் மேற்கொண்டு வரும் வி.கே.சசிகலா சேலம் மாவட்டத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சார வேனில் அமர்ந்தபடி பேசிய
“அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது தான் திமுக அரசின் சாதனை எனவும், அதிமுகவை மீட்பது தான் எனது முழு பணி என்றும் பேசினார். வரலாறு உள்ள வரை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மாபெரும் தலைவர்களை யாரும் மறக்க முடியாது” என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலா பேசியதாவது:
“2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எனது தலைமையில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் திமுக நிறைவேற்றவில்லை.
மின் கட்டண உயர்வு ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடிய ஒன்று என்றும் 63 சதவீதம் பேர் 200 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்த கூடியவர்களாக உள்ளதால் பொதுமக்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர். மின் கட்டண உயர்வால் சிறுகுறு தொழில்கள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கழகத் தொண்டர்கள் ஒத்துழைப்புடன் நிச்சயமாக அதிமுகவை மீட்பேன் என்றும் அதிமுகவில் இருந்து எல்லோரையும் சேர்த்து கொள்வதுடன் அதிமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டர்களும் தனக்கு முக்கியம்” இவ்வாறு கூறினார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் நான் என
ஒருபுறம், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் என
ஒருபுறம் என பேசி வரும் நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தல் என் தலைமையில் அதிமுக சந்திக்கும் மாபெரும் வெற்றி பெறும் என சசிகலா கூறி இருப்பது மீண்டும் அதிமுகவினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.