இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரச் சமநிலையை நிலை நிறுத்துவது மிகவும் முக்கியமானது, அதேவேளையில் அவசியமானதும் கூட.
யாராக இருந்தாலும், எவ்வளவு தொகையை முதலீடு செய்வதாக இருந்தாலும் திட்டத்தின் ஒவ்வொரு நன்மை தீமை பற்றியும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அவ்வப்போது முதலீட்டு திட்டத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் ஏற்படும் மாற்றங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டியதும் அவசியம்.
அந்த வகையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் மத்திய அரசு செய்துள்ள மாற்றத்தை பாருங்க.
மாதம் ரூ.50,000 பென்ஷன் வேண்டுமா.. LIC-யின் சாரல் பென்ஷன் திட்டத்தை பாருங்க..!
அடல் பென்ஷன் யோஜனா திட்டம்
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வதற்கான விதிகள் மாறவுள்ளன. அடல் பென்ஷன் யோஜனாவின் புதிய விதிகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.புதிய மாற்றத்தின் படி வருமான வரி செலுத்துவோர் அக்டோபர் 1, 2022 முதல் திட்டத்தில் சேர முடியாது.இது தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
18-40 வயதுக்கு உட்பட்டவர்
தற்போதைய விதிகளின்படி, 18-40 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால், நீங்கள் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் புதிய விதி அமல்படுத்தப்பட்ட பிறகு வருமான வரி செலுத்துவோர் இத்திட்டத்தில் சேர முடியாது. அப்படியானால் பழைய சந்தாதாரருக்கு என்ன நடக்கும்?
புதிய விதி
நீங்கள் அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்திருந்தால், புதிய விதி உங்களைப் பாதிக்காது. நீங்கள் ஏற்கனவே வரி செலுத்துபவராக இருந்தாலும் கூட. அக்டோபர் 1ம் தேதிக்கு முன் கணக்கு துவங்கியவர்களுக்கு இத்திட்டத்தின் பலன்கள் தொடர்ந்து பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
PFRDA அமைப்பு
இந்தத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) கட்டுப்படுத்தப்படுகிறது. எந்த வங்கியிலும் அடல் பென்ஷன் யோஜனா கணக்கைத் திறக்கலாம், அதேபோல் உங்கள் பணம் அந்த வங்கிக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் மூலம் கழிக்கப்படுகிறது.
அமைப்புசாரா துறை
அடல் பென்ஷன் யோஜனா (APY) அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 1,000, 2,000, 3,000, 4,000 அல்லது 5,000 வரையில் உத்தரவாத உடன் அளிக்கப்படுகிறது.
Atal Pension Yojana End for taxpayers; October 1 new rules will be implemented
Atal Pension Yojana End for taxpayers; October 1 new rules will be implemented; How and who will suffer full details