அமெரிகாவில் குரங்கம்மை தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு என்று கூறுகின்றனர் மருத்துவ நிபுணர்கள். இது குறித்து மருத்துவர்கள் “ குரங்கம்மை தொற்று எண்ணிகையில் குறைந்தாலும் இன்னும் முழுமையான அளவில் தடுக்கப்படவில்லை.
குரங்கம்மை நோயை முழுமையாக கட்டுப்படுத்த நாம் தவிர முயற்சியில் இறங்க வேண்டும். குரங்கம்மை தோற்று குறித்து பல்வேறு தரப்பினருக்கு சந்தேகங்கள் உள்ளன. குரங்கம்மை நோய் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் .” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின் படி உலகில் சுமார் 52, 997 பேர் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 90 சதவீதத்திற்கும் அதிகமான குரங்கம்மை பரவலானது தன்பாலின உறவில் ஈடுபடும் ஆண்களே என்பது தெரியவந்துள்ளது.
உடல் உறவு மூலம் மட்டுமே இந்த நோய் ஏற்படுவதில்லை என்ற போதிலும், இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகும் பெரும்பான்மையினர் தன்பாலின உறவில் ஈடுபடுபவர்கள் என்பது பல்வேறு ஆய்வுகளில் தெரிகிறது. இந்த பாதிப்பு தன்பாலின ஆண்களுக்கே அதிகம் காணப்படுவதால், இவர்கள் உறவில் ஈடுபடும் பார்ட்னர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுரை வழங்கியுள்ளது.
இதை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் உள்ள சுமார் 17 லட்சம் தன்பாலின உறவு கொள்பவர்களை அந்நாட்டு அரசு கண்காணித்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதல்கட்டமாக 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 4500க்கும் மேற்பட்டோருக்கும், ஜெர்மனியில் 2800க்கும் மேற்பட்டோருக்கும் இந்த தொற்று பரவியுள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது.
குரங்கம்மை தொற்று குறைந்து வருவது அமெரிக்காவில் பலரை ஆறுதல் அடைய செய்துள்ளது.