இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கேட்சை தவறவிட்டதால் இரவு முழுவதும் வருத்தப்பட்டுள்ளார்
விமர்சனங்களை கண்டுகொள்ளாத அர்ஷ்தீப் சிங் யார்க்கர் பந்து ஃபுல்டாஸ மாறியது தான் கவலை என தெரிவித்துள்ளார்
இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் கடுமையான விமர்சனங்களை சந்தித்ததால் இரவு முழுவதும் தூங்கவில்லை என அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் தனது கைக்கு வந்த எளிதான கேட்சை தவறவிட்டார்.
இதனால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
குறிப்பாக அவரை காலிஸ்தானி என பலர் கேலி செய்தனர்.
இந்த நிலையில் கேட்ச் தவறவிட்ட அன்றைய இரவு முழுவதும் அர்ஷ்தீப் சிங் தூங்கவில்லை என அவரது பயிற்சியாளர் ஜஸ்வந்த் ராய் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ‘அன்று அர்ஷ்தீப் மிகவும் பதற்றமாக இருந்தார். உன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் நீ செய்தாய், கவலைப்படாதே என்று அவருக்கு ஆறுதல் கூறினோம்.
அவர் ஒரு கேட்சைத் தவறவிட்டாலும் ஆட்டத்தின் கடைசி ஓவரில் கிட்டத்தட்ட ஏழு ஓட்டங்களை பாதுகாத்து சிறப்பாகப் பந்து வீசியிருந்தார்.
பின்னர், இது பற்றி அவரிடம் பேசியபோது அன்று இரவு அவரால் தூங்க முடியவில்லை என்று வருத்தத்துடன் என்னிடம் கூறினார்.
மேலும், தான் விமர்சனங்கள் பற்றிக் கவலைப்படவில்லை என்றும், தான் முயன்ற யார்க்கர் ஃபுல் டாஸாக மாறியது குறித்து மட்டுமே தனது எண்ணங்கள் இருந்ததாகவும் கூறினார்.
அர்ஷ்தீப்பின் தவறுகளைச் சரிசெய்யும் அணுகுமுறை அவருக்கும், இந்திய அணிக்கும் உதவும். நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பைப் போட்டி அவருக்கு மிகவும் முக்கியமானது’ என தெரிவித்துள்ளார்.