இதுதான் கம்பி கட்டுறது!பயோ டேட்டாவை இப்பவே கொடுங்க-இமாச்சலில் ஆட்சி அமைத்த உடனே வேலை..சொல்வது காங்.

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த உடன் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்; ஆகையால் இளைஞர்கள் இப்போதே பயோ டேட்டாவை எங்களிடம் தரலாம் என அக்கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக, காங்கிரஸ் சம பலம் உள்ள மாநிலங்களில் இமாச்சல பிரதேசம் (ஹிமாச்சல பிரதேசம்) ஒன்று. மொத்தம் 68 எம்.எல்.ஏ. இடங்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க தேவை 35 எம்.எல்.ஏக்கள்.

2017 தேர்தல் முடிவுகள்

இமாச்சல பிரதேச சட்டசபைக்கு 2017-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக 44 இடங்களிலும் காங்கிரஸ் 21 இடங்களிலும் சிபிஎம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 48.8% வாக்குகளும் காங்கிரஸுக்கு 41.1% வாக்குகளும் கிடைத்தன.

 ஆபரேஷன் தாமரை

ஆபரேஷன் தாமரை

பாஜகவின் ஆபரேஷன் தாமரை இந்த மாநிலத்திலும் அரங்கேற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பாஜகவுக்கு தாவினர். ஒரு கட்டத்தில் பாஜக தலைவர்களே, போதும்.. போதும்.. இனி காங்கிரஸில் இருந்து யாரும் எங்க கட்சிக்கு வரவேண்டாம் என கெஞ்சும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்திலும் பாஜக, காங்கிரஸுக்கு போட்டியாக ஆம் ஆத்மியும் சவால்விடுத்து வருகிறது.

தீவிரம் காட்டும் கட்சிகள்

தீவிரம் காட்டும் கட்சிகள்

இமாச்சல பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுகின்றன. யார் யாருக்கு தேர்தலில் போட்டியிட என்பதையெல்லாம் காங்கிரஸ் கட்சி இப்போதே முடிவு செய்துவிட்டதாம். ஏனெனில் கடைசிநேரத்தில் சீட்டு கிடைக்காமல் கட்சி மாறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது என்பதுதானாம்.

பயோ டேட்டா வாங்கும் கட்சிகள்

பயோ டேட்டா வாங்கும் கட்சிகள்

அதேநேரத்தில் இமாச்சல பிரதேச தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் பிரசாரம் களைகட்டிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் வேலைவாய்ப்பு பிரச்சனையை காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கையில் எடுத்துக் கொண்டுள்ளன. இரு கட்சிகளும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்பாக மாறி மாறி வாக்குறுதி கொடுத்து வருகின்றன. இதில் அதி உச்சமாக, காங்கிரஸ் தலைவர்கள் இப்போதே இளைஞர்கள் பயோ டேட்டாவை கொடுத்து வையுங்கள்.. ஆட்சி அமைந்ததும் வேலை உறுதி என பிரசரம் செய்கின்றனர். கையோடு வீடு வீடாக இளைஞர்களின் பயோ டேட்டாக்களையும் கேட்டு வாங்குகின்றனர். இதைப் பார்த்து எப்படியெல்லாம் கம்பி கட்டுறாங்க என்கிற கமெண்ட்ஸும் காதில் விழாமல் இல்லை.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.