உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DHL நிறுவனம் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சேவை செய்து வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் வரும் காலங்களில் இந்தியாவில் தனது சேவையை அதிகரிக்க DHL திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
முதல்கட்டமாக இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 500 மில்லியன் முதலீடு செய்ய உள்ளதாக DHL அறிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநில எது? தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா..?

DHL நிறுவனம்
இந்தியாவில் பெங்களூர், சென்னை, கொல்கத்தா, மும்பை, என்சிஆர் மற்றும் புனே போன்ற முக்கிய மெட்ரோ நகரங்களில் DHL தனது சேவையை சிறப்பாக செய்து வருகிறது. அதுமட்டுமின்றி கொச்சி, கோயம்புத்தூர், கவுகாத்தி, சனந்த், இந்தூர், லக்னோ, புவனேஷ்வர், ஓசூர் மற்றும் விசாகப்பட்டினம் போன்ற வேகமாக வளர்ந்து வரும் நகரங்களிலும் DHL அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

பணியாளர்கள் இரட்டிப்பு
2026 ம் ஆண்டிற்குள் DHL நிறுவனம் இந்தியாவில் அதன் பணியாளர்களை 25,000 பேராக இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக பசுமை போக்குவரத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக DHL நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீண்ட கால சேவை
இதுகுறித்து DHL சப்ளை செயின் ஆசிய பசிபிக் நிறுவனத்தின் CEO டெர்ரி ரியான் அவர்கள் கூறியபோது, ‘இந்தியாவில் நீண்ட கால சேவையை கணக்கில் எடுத்து கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இங்குள்ள வணிகங்கள் நம்பிக்கையுடன் இருப்பதே அதற்கு காரணம் என்று கூறினார்.

பெங்களூரு-புனே
ஜெர்மனியின் DPDHL குழுமத்தின் ஒரு பகுதியான DHL நிறுவனம் வாடிக்கையாளர் தேவையை கணக்கில் கொண்டு அடுத்த 12-18 மாதங்களுக்குள் பெங்களூரு மற்றும் புனேயில் இரண்டு புதிய வணிக ஆதரவு மையங்களை (பிஎஸ்சி) திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது, மும்பை, குர்கான் மற்றும் சென்னையில் மூன்று 24X7 மையங்களை இந்நிறுவனம் இயக்கி வருகிறது.

இந்தியாவில் DHL
உலகின் பல நாடுகளில் தற்போது பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் குறிப்பாக இந்தியாவில் நாங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்று வருகிறோம் என்றும் DHL சப்ளை செயின் CEO ஆஸ்கார் டி போக் கூறினார்.

இந்தியாவில் திறமையாளர்கள்
மேலும் இந்தியாவில் அதிக தகுதிவாய்ந்த இளம் திறமையாளர்கள் மற்றும் புதுமையான டிஜிட்டல் தொழில்முனைவோர் நிறைந்தவர்கள் அதிகம் உள்ளனர். எனவே இந்திய தொழிலதிபர்களின் விருப்பத்திற்குரிய நிறுவனமாக எங்கள் நிறுவனம் இருப்பதாகவும் ஆஸ்கார் டி போக் கூறினார்.

€500 மில்லியன் முதலீடு
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் €500 மில்லியன் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதன் மூலம் இந்தியாவில் எங்கள் வணிகம் அதிகரிக்கும் என்றும், பல இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றும் ஆஸ்கார் டி போக் கூறினார்.
DHL to invest €500 million in India over the next five years
DHL to invest €500 million in India over the next five years