உக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் கல்வியை தொடர முடியாது: மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் இந்திய பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

latest tamil news

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளதாவது:


* உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் இந்திய பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய முடியாது
* உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய இயலாது.
* அதேபோல் இந்திய பல்கலைக்கழகங்களில் தொடர வழிவகை செய்யும் முறை தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் இடமில்லை.
* மாணவர்களுக்கு தளர்வு செய்து கொடுத்தால் அது இந்தியாவின் மருத்துவ படிப்பின் தரத்தினை பாதிக்கும்.
* இந்திய மருத்துவ கவுன்சில் சட்டப்படி வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் தொடர முடியாது. இவ்வாறு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.