Chennai Tamil News:தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டு வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
மேலும், இந்த நகரத்தை உலகத் தரத்திற்கு மேம்படுத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமத்துடன் 4 புதிய துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுக்களின் மூலம், இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து திட்டம் மற்றும் சாலைகள் மறு சீரமைப்புத் திட்டம், மல்டி மாடல் இன்டகிரேஷன், வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் என்ற அனைத்து போக்குவரத்து வசதிகளையும் செயல்படுத்தப்படவுள்ளன.
இந்த திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தபடவுள்ளது. இந்தத் திட்டத்தை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் கீழ், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தை சார்ந்து 4 புதிய துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் தேவை மற்றும் பயன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து திட்ட துணைக் குழுவிற்கு கீழ் நடக்கவிருக்கும் செயல்முறை:
இந்த குழுவிற்கு போக்குவரத்துறை ஆணையர் தலைவாராக செயல்படுவார். பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இந்த குழுவிற்கு உறுப்பினர்களாக செயல்படுவார்கள். சாலை பாதுகாப்பு, சாலை மேம்பாடு, நடைபாதை உள்ளிட்டவைகள் தொடர்பான பணிகளை இந்தக் குழு மேற்கொண்டு சீரமைக்கும்.
மல்டி மாடல் இன்டகிரேஷன் துணைக் குழுவிற்கு கீழ் நடக்கவிருக்கும் செயல்முறை:
சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் இதன் தலைவராக செயல்படுவார். பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இந்த குழுவிற்கு உறுப்பினர்களாக செயல்படுவார்கள். அனைத்து போக்குவரத்து வசதிகளையும் இணைக்கும் மல்டி மாடல் இன்டகிரேஷன் திட்ட பணிகளை இந்த குழு ஏற்று பணிபுரியும்.
நகர்ப்புற போக்குவரத்து மீள்திறன் துணைக் குழுவிற்கு கீழ் கொடுக்கப்படும் பணிகள்:
சென்னை மாநகராட்சி ஆணையர் இந்த குழுவின் தலைவராக செயல்படுவார். பேரிடர் காலங்களில் போக்குவரத்து தங்கு தடையின்றி இயங்குவது தொடர்பான பணிகளை இந்தக் குழு ஏற்று மேம்படுத்தும்.
டிஜிட்டல் சென்னை துணைக் குழுவின் பணிகள்:
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் சி.இ.ஓ., இதன் தலைவராக செயல்படுவார். தரவு மேலாண்மை உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகள் தொடர்பாக திட்ட பணிகளை இந்தக் குழு ஏற்று செயல்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil