ஒவ்வொரு வீட்டுக்கும் தொலைத்தொடர்பு இணைப்பு: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்!

நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தொலைத்தொடர்பு இணைப்பை உறுதி செய்தல், சேவையின் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய பொதுவான இலக்குகளில் துறை அதிகாரிகளிடையே ஒழுங்குமுறையிலிருந்து வளர்ச்சி வரையிலான உணர்வில் மாற்றம் தேவை என்று மத்திய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கள அலுவலர்கள், தலைமையக துறை அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளின் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் தேவுசிங் சவுகானால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த உச்சிமாநாட்டில், தொலைத் தொடர்புத்துறை சம்பந்தமான பல்வேறு விஷயங்கள் குறித்த இணை பங்குதாரர்களின் பணி குழுக்களின் பரிந்துரைகள் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் எடுத்துரைக்கப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதாரத்தின் உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்கத்தில் தரமான தொலைத்தொடர்பு இணைப்பின் அவசியத்தை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சுட்டிக் காட்டினார். தொழில்துறை மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து, துறை மற்றும் தலைமையகத்தில் உள்ள துறை அலுவலர்கள் பணியாற்றினால் மட்டுமே தொழில்நுட்பத்தின் மாறும் தன்மைக்கு ஏற்றவாறு தொலைத்தொடர்புத் துறையை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று அவர் கூறினார்.

பழங்கால தொலைத்தொடர்பு சட்டங்களுக்கு பதிலாக வலுவான மற்றும் எதிர்காலத்துக்கு ஏற்ற சட்டம் அவசியம் என்றும், இது தொடர்பான வரைவு அறிக்கை, பொது மக்களின் ஆலோசனைகள்/ கருத்துக்களுக்காக விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் பேசிய அமைச்சர் தேவுசிங் சவுகான், 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கிய முன்னேற்றத்தில் தொலைத்தொடர்புத் துறையின் பங்களிப்பை வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.