அதிமுகவின் பொதுச்செயலாளர் என உரிமை கோரிவரும்
தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறார், அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
அதிமுகவில் அத்தனை அணிகளையும் இணைத்து தனது தலைமையில் வழிநடத்த உள்ளதாக சசிகலா கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் உள்ள தனது இல்லத்தில் அண்ணா பிறந்த நாளை கொண்டாடினார் சசிகலா. அண்ணா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அண்ணாவின் பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக இணைந்து அதிமுகவை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் செல்வோம்.
நேரம் வரும்போது கட்சி அலுவலகத்துக்குச் செல்வேன். ஓபிஎஸ்ஸும் நாங்களும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். திமுக அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை என நான் போகும் இடங்களில் மக்கள் தெரிவிக்கின்றனர். ஏழை எளிய மக்களுக்காக அம்மா கொண்டுவந்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்துவது நல்லதல்ல. அரசாங்கத்தில் நிறைய தவறுகள் நடக்கின்றன. அவற்றை அரசு சரிசெய்ய வேண்டும்.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள்மீது நடத்தப்படும் சோதனை குறித்து வெளியே தெரிந்த பிறகே பேச வேண்டும், நாமாக எதையும் சொல்லக்கூடாது. அதிமுகவுக்கு நிச்சயமாக தலைமை ஏற்பேன், அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல வெற்றியைப் பெறுவோம்” என கூறினார்.