லக்கிம்பூர் : அசாமில், கிறிஸ்தவ பெண்ணை காதலித்து அந்த மதத்திற்கு மாற மறுத்த பழங்குடியின ஹிந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டு, மரத்தில் தொங்க விடப்பட்டார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள கொய்லாம்ரி பலிஜான் கிராமத்தில் வசிப்பவர் பிக்கி பிஷால். பழங்குடியின ஹிந்து மதத்தைச் சேர்ந்த இவர், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அந்தப் பெண் பிஷால் வீட்டுக்கு வந்து விட்டார்.
இதையடுத்து நான்கு தேவாலயங்களில் இருந்து பிஷால் வீட்டுக்கு வந்த நிர்வாகிகள் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் கிறிஸ்தவ மதத்துக்கு மாற வேண்டும் என நிபந்தனை விதித்தனர். இதற்கு பிஷால் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தேவாலய நிர்வாகிகள், பிஷாலை நேற்று முன்தினம் இரவு சரமாரியாக தாக்கி ரத்தம் சொட்டச் சொட்ட இழுத்துச் சென்றனர்.
இந்நிலையில், நேற்று காலை அவர் அதே ஊரில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் முழுதும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ரத்தக் காயம் இருந்தது. இதனால் கொய்லாம்ரி கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக லக்கிம்பூர் போலீஸ் எஸ்.பி., கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement