சட்டம் தன் கடமையை செய்யும்- மம்தா பானர்ஜி

கொல்கத்தா:
ட்டம் தன் கடமையை செய்யும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மேற்குவங்க அரசைக் கண்டித்து புதிய தலைமைச் செயலகம் நோக்கி பாரதிய ஜனதா கட்சி பேரணி ஒன்றை அறிவித்திருந்தது. அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த பேரணியில் பாஜகவினர் பலர் கலந்து கொண்ட நிலையில், போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்துப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்த போதிலும் தடுப்புகளை மீறி பாஜகவினர் பேரணியை நடத்தியதால் காவலர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளு மோதலில் முடிந்தது. இறுதியில் தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டு பாஜகவினர் கலைக்கப்பட்டனர். இருப்பினும் ஏற்பட்ட வன்முறையில் காவல்துறை வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது. தடையை மீறி பேரணியை ஏற்பாடு செய்த நந்திகிராம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுவேந்து அதிகாரி, எம்பி லாகித் சட்டர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுப்பு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக தனது போராட்டத்துக்காக, வெளிமாநில ரெளடிகளை அழைத்து வந்துள்ளது. பேரணியின்போது ஏராளமான காவல் துறையினா் தாக்கப்பட்டுள்ளனர். வன்முறையாளா்கள் மீது காவல் துறையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க முடியும். ஆனால், அரசு நிா்வாகம் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடித்தது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜனநாயக ரீதியிலான அமைதிவழி போராட்டங்களை நாங்கள் எதிா்க்கவில்லை என்றும், வன்முறை, தீவைப்பு செயல்களில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றும் கூறிய அவர், வன்முறையாளா்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனா். சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.