சமந்தா, நாகசைதன்யா பிரிந்தது துரதிர்ஷ்டம் – நாகார்ஜுனா

தென்னிந்தியத் திரையுலகத்தின் பொருத்தமான காதல் ஜோடி என அழைக்கப்பட்டவர்கள் சமந்தா, நாகசைதன்யா. சில ஆண்டுகள் காதலித்த பின் திருமணம் செய்து கொண்டு அடுத்த சில ஆண்டுகளிலேயே பிரிந்தார்கள். அவர்களது பிரிவு பற்றி இன்னமும் ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர்களது பிரிபு பற்றி நாகசைதன்யாவின் அப்பாவான நடிகர் நாகார்ஜுனாவிடம் கேட்ட கேள்விக்கு, “நாகசைதன்யா, சமந்தா பிரிவு துரதிர்ஷ்டமான ஒன்று. அதைப் பற்றி நாம் தொடர்ந்து கவலைப்பட வேண்டியதில்லை. அது முடிந்துவிட்ட ஒன்று. அது எங்களது வாழ்க்கையை விட்டு வெளியேறிவிட்டது. ஒரு நாள் அது மற்றவர்களின் வாழ்க்கையிலிருந்தும் வெளியேறும். நாகசைதன்யா, சமந்தாவை பிரிந்த போது எங்களால் அவருடன் அதிக நேரம் இருக்க முடியவில்லை. ஆனால், அவர் இப்போது மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார்,” என நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சமந்தாவின் அப்பா தனது மகளின் திருமண வாழ்க்கை பற்றி பேஸ்புக்கில் பதிவிட்டது வைரலாகப் பரவியது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.