சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது நடப்பு ஆண்டில் 3.5% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது முன்னதாக 5.5% ஆக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த குறிப்பிடத்தக்கது.
சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி காரணமாக பொருளாதாரம் மிக மோசமான வளர்ச்சிக்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
சீனாவின் சரிவு இந்தியாவுக்கு பலன் தரும்.. எப்படி தெரியுமா.. எஸ்பிஐ என்ன சொல்லியிருக்கு பாருங்க!
பொருளாதாரம் சரிவு
தொடர்ந்து நாடு தழுவிய லாக்டவுன் காரணமாக தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் முக்கிய வணிகமான ரியல் எஸ்டேட் வணிகமானது பெரும் சரிவினைக் கண்டுள்ளது. இதுவும் சீனாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நுகர்வு சரியலாம்
கொரோனாவை தொடர்ந்து சீனாவில் கடும் மின்வெட்டு, ரியல் எஸ்டேட் துறை சரிவு என பல காரணிகளுக்கு மத்தியில், உற்பத்தியும் பெரும் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் சீனாவின் நுகர்வு பெரும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாதியில் பெரும் சரிவு
நடப்பு ஆண்டின் முதல் பாதியில் சரிவினைக் கண்ட நிலையில், இரண்டாம் பாதியில் ஆவது பொருளாதாரம் மேம்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. எனினும் தற்போது சீனாவில் பல இடங்களில் கொரோனாவின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கான 3.5% ஐ எட்டுமா? என்பதே பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
ஆய்வு நிறுவனங்களின் கணிப்பு
மார்கன் ஸ்டான்லி, ப்ளூம்பெர்க், பார்க்லேஸ் பி எல் சி உள்ளிட்ட சர்வதேச ஆய்வு நிறுவனங்கள், சீனா மெதுவான வளர்ச்சியினையே கண்டு வருகின்றது. ஆக அதன் வளர்ச்சி விகிதம் குறையலாம் என கணித்துள்ளன. இது கொரோனா ஜீரோ கோவிட் பாலிசியினால் மட்டும் அல்ல, ரியல் எஸ்டேட் மந்த நிலை, தேவை சரிவு, சர்வதேச அளவிலான மந்த நிலை என பல காரணிகளும் காரணம் என கணித்துள்ளன.
பார்க்லேஸ் கணிப்பு
குறிப்பாக பார்க்லேஸ்-ன் சீன பொருளாதார நிபுணர் நடப்பு ஆண்டில் 2.6% ஆக வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளது. இது முன்னதாக 3.1% ஆக மதிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்ந்து சொத்துகளின் விற்பனை சரிவு, கோவிட் லாக்டவுன், தேவை சரிவு, நிதி பற்றாக்குறை என பல காரணிகளுக்கு மத்தியில் சரிவில் கணித்துள்ளது.
சரிவு தான்
கடந்த மாதத்தினை காட்டிலும் தற்போது தொழிற்துறை உற்பத்தி, சில்லறை விற்பனை, முதலீடு என பலவும் செப்டம்பரில் மேம்பட்டதாக தெரியவில்லை. அதோடு வீட்டு சந்தையிலும் சரிவிலேயே காணப்படுகிறது. நுகர்வோர் செலவினங்களும் குறைந்துள்ளன. எனினும் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும், சீன மத்திய வங்கி எந்த முக்கிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி சரிவு
சீனாவின் முக்கிய நகரங்களான ஷாங்காய், சென்ஷோன், செங்குடு உள்ளிட்ட நகரங்கள் லாக்டவுனால் முடக்கப்பட்டன. இதன் காரணமாக அதன் வணிகம் முற்றிலும் முடங்கியது. குறிப்பாக சீனாவின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. தொழிற்துறையில் பாதிப்பு ஏற்பட்டது.
Experts predict that China’s growth rate may be worse this year than in 2020
China’s economic growth rate is expected to grow by 3.5% this year. It was earlier targeted at 5.5%.