சூட்கேஸில் இருந்த அழுகிய உடல்கள்; நியூஸிலாந்தை உலுக்கிய வழக்கில் 42 வயது பெண் கைது!

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில், யாரும் உரிமை கோராத பொருட்கள் கடந்த மாதம் ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தில் வாங்கப்பட்ட பொருட்களில் சூட்கேஸ் ஒன்றூ இருந்தது. அதனை விலை கொடுத்து வாங்கிய குடும்பம், அதில் அழுகிய சடலங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.   சூட்கேஸில் அழுகிய சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் சமீபத்தில், சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட அழுகிய சடலங்கள் பத்து வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், இரண்டு குழந்தைகளின் அடையாளங்களை கண்டுபிடித்து உறுதிப்படுத்தினர். 

இந்நிலையில் மாதம் நியூசிலாந்தில் லக்கேஜில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் சடலம் தொடர்பாக தென் கொரிய அதிகாரிகள் ஒரு பெண்ணை கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்தனர். தென் கொரிய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து நாட்டவர் என்று கூறப்படும் 42 வயது பெண், தென்கிழக்கில் உள்ள உல்சானில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது, மேலும், கைது செய்யப்பட்ட பின் அவர் சியோலுக்கு கொண்டு செல்லப்பட்டார். 

2018 ஆம் ஆண்டு ஆக்லாந்தில் 7 மற்றும் 10 வயதுடைய தாயின் இரண்டு குழந்தைகளைக் கொன்றதாக சந்தேக நபர் நியூசிலாந்து காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்டார். கொலை செய்த பிறகு, அவள் தென் கொரியாவுக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பின்னர், அந்த பெண் வியாழன் அன்று (செப்டம்பர் 15) சியோல் மத்திய மாவட்ட வழக்குரைஞர்கள் அலுவலகத்திற்கு வண்ணம் பூசப்பட்ட கண்ணாடிகள் கொண்ட போலீஸ் காரில் வந்தார்.

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!

ஆக்லாந்திற்கு வெளியே கைவிடப்பட்ட பொருட்களுக்கான ஏலத்தில், பொருட்களை டிரெய்லர் ஏற்றி வாங்கிய பிறகு, இரண்டு குழந்தைகளின் உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக சடலங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததால், பிரேத பரிசோதனை மூலம் தகவல்களை அறிவதில் சிக்கல்கள் இருப்பதாகவும்  நியூசிலாந்து போலீசார் தெரிவித்தனர்.

காவல் துறை இன்ஸ்பெக்டர் டோஃபிலாவின் கூற்றுப்படி, இந்த வழக்கைப் பற்றி விசாரிப்பது மிகவும் கடினம் என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், “இவ்வளவு குறுகிய காலத்திற்குள் வெளிநாட்டில் ஒருவரைக் காவலில் எடுத்திருப்பது என்பது கொரிய அதிகாரிகளின் உதவி மற்றும் எங்கள் நியூசிலாந்து காவல்துறையின் இன்டர்போல் ஊழியர்களின் ஒருங்கிணைப்பின் காரணமாக நடந்த விஷயம்” என்று  தெரிவித்ததாக AFPசெய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழுக்கு இந்தி எதிரியா… என்ன சொல்கிறார் அமித் ஷா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.