மக்கள் அதிகமாகக் கூடும் பொது இடங்களில் எதிர்பாராத நேரங்களில், திருடர்களின் சாமர்த்தியத்தால் பலரின் பொருள்கள் களவு போவதென்பது அவ்வப்போது ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதேசமயம், இதுபோன்ற சம்பவங்களில் திருடர்கள் வசமாக மாட்டிக்கொண்டு தர்ம அடி வாங்கும் நிகழ்வுகளும் அரங்கேறும்.

அப்படியான ஒரு நிகழ்வாகத்தான் பீகாரில், ரயில் ஒன்றில் ஜன்னல் வழியே பயணியிடம் செல்போன் பறிக்க முயன்ற திருடன் ஒருவன், பயணிகளிடம் கைகள் சிக்கிக்கொள்ளக் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டருக்கு மேல் ஜன்னலில் தொங்கிய சம்பவம் நடந்திருக்கிறது. அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
Though #unverified yet chilling. A mobile snatcher caught in a moving train when his failed attempt probably led to his worst day of life. The thief was hung by a window in a moving train from Begusarai to Khagaria. The passengers handed him over to GRP. IS this act justified? pic.twitter.com/o3ja5qWggi
— Kumar Saurabh Singh Rathore (@JournoKSSR) September 15, 2022
அந்த வீடியோவில், பயணிகளிடம் வசமாகச் சிக்கிக்கொண்ட திருடன், பலமுறை தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியதாகத் தெரியவருகிறது. பீகாரின் பெகுசராயில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், பயணிகளிடம் சிக்கிக்கொண்ட திருடன், ரயில் ககாரியா பகுதிக்கு அருகில் வர பயணிகள் கைகளை விட்டதும் தப்பிச்சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது பற்றிய செய்தியும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.