சென்னை: தமிழகத்தில் இன்புளுன்ஸா காய்ச்சலால் 252 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி ஆகியவை இன்புளுன்ஸா காய்ச்சலின் அறிகுறிகள் எனவும் காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளிடம் இருந்து மற்ற குழந்தைகள் விலகி இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் கடந்த 2 ஆண்டுகளில் முகக்கவசம் உள்ளிட்டவை பின்பற்றப்பட்டதால் காய்ச்சல் குறைவாக இருந்தது, படுக்கைகள் இல்லாமல் மருத்துவமனைகள் நிரம்பி வருவதாக கூறுவது தவறான தகவல் எனவும் அவர் கூறினார்.