தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி-யின் பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன.
இவ்வங்கி அதன் வெளியீட்டு விலையான 510 ரூபாய்க்கு எதிராக 3 சதவீதம் தள்ளுபடி உடன் NSE இல் 495 ரூபாய்க்குப் பட்டியலிடப்பட்டன.
ஆனால் மும்பை பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குகள் 510 ரூபாய் விலைக்கே பட்டியலிடப்பட்டாலும் 484 ரூபாய் வரையில் சரிந்தது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குகள் தடுமாற்றம்.. முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன..?
831 கோடி ரூபாய் ஐபிஓ
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செப்டம்பர் 5-7 தேதிகளில் 831 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ வெளியிட்டு, இன்று பட்டியலிடப்பட்டது. இன்று பட்டியலிடும் போது நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.8,075.92 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2.86 மடங்கு அதிகப் பங்கிற்கு முதலீடு
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் ஐபிஓ பங்குகளைக் கடைசி நாளில் 2.86 மடங்கு அதிகப் பங்கிற்கு முதலீடு குவிந்துள்ளது. ரூ.831.6 கோடி ஐபிஓ-வில் 87,12,000 பங்குகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் 2,49,39,292 பங்குகளுக்கு முதலீடு குவிந்தது.
முதலீட்டாளர்கள்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி-யின் IPOவின் தகுதி வாய்ந்த நிறுவன வாங்குபவர்கள் (QIBs) பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 1.62 மடங்கு அதிக முதலீடுகளும், நிறுவன சாரா முதலீட்டாளர்கள் (NIIs) பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 2.94 மடங்கு அதிக முதலீடுகளும், சில்லறை முதலீட்டாளர்கள் (RIIs) பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 6.48 மடங்கு அதிக முதலீடுகளும் குவிந்துள்ளது.
மதிப்பீடு
ஆனந்த் ரதி ஷேர்ஸ் & ஸ்டாக் ப்ரோக்கர்ஸ் அமைப்பு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் ஐபிஓ-வை “நீண்ட கால” முதலீட்டு மதிப்பீட்டைக் கொடுத்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணமாகத் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் செயல்திறன் மற்றும் ஆரோக்கியமான வருவாய் விகிதம் நீண்ட கால வளர்ச்சிக்கு மிகவும் ஏதுவாகவும், வளர்ச்சி வாய்ப்புகள் நிறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான தனியார் துறை வங்கி. இவ்வங்கி தமிழ்நாட்டில் தூத்துக்குடி-யை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் இயங்கி வருகிறது.
509 வங்கி கிளைகள்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சுமார் 509 கிளைகள், 12 நிர்வாக அலுவலகங்கள், 1,141 ஏடிஎம்கள், 282 பண மறுசுழற்சி இயந்திரங்கள் (CRM) மற்றும் 101 ஈ-லாபி-கள் கொண்ட அமைப்பை கொண்டுள்ளது.
வர்த்தகப் பகுதிகள்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் இந்த 509 கிளைகளில் 76 கிளைகள் பெருநகரங்களிலும், 80 கிளைகள் நகர்ப்புறங்களிலும், 247 கிளைகள் 2ஆம் தர நகர்ப்புறங்களிலும், 106 கிளைகள் கிராமப்புறங்களிலும் உள்ளன.
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மற்றும் ஆந்திரா
இந்த வங்கி தென்னிந்தியாவில் பரவலாக இருந்தாலும், இந்தியாவின் பிற மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 90 கிளைகளைக் கொண்டு உள்ளன. இவ்வங்கிகள் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளில் இல்லை.
Tamilnad Mercantile Bank IPO: Listing at 3 percent Discount at 495 in NSE, listed at IPO price 510 in BSE
Tamilnad Mercantile Bank IPO: Listing at 3 percent Discount at 495 in NSE, listed at IPO price 510 in BSE