இண்டர்நெட், செல்போன் ஆகியவை வளர்ந்துவிட்ட இந்த நவீன காலத்தில் லைக்ஸ்களுக்காக சமூக வலைத்தளங்களிலேயே குடியிருக்கும் ஒரு சிலர் பல்வேறு விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இது ஒருவகையான மனநோய் என மருத்துவர்கள் எச்சரித்தாலும், இவ்வகை செயல்பாடுகள் மூலம் பலரும் பணம் சம்பாதிக்கவும் செய்கின்றனர்.
அதேபோல், குழந்தைகளின் குறும்புத்தனம், டிக்டாக், நடனம், இளைஞர்களின் சேட்டைகள், விலங்குகள் உள்ளிட்ட வீடியோக்கள் இணையத்தில் கவனத்தை பெற்று அதிக லைக்ஸ்களை பெறும்.
அவ்வப்போது திருமணத்திற்கு இளைஞர்கள் வைக்கும் பேனர் புகைப்படங்கள் கூட இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், திருமண மேடையில் மணமகன் தாலிக் கட்டும் தருணத்தில் மணப்பெண் துள்ளி குதித்ததோடு மணமகனை அணைத்து முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவுக்கு கீழே காதல் திருமணம் செய்த தம்பதி என நினைக்கிறேன் அதனால் தான் இவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும், இதே மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும் என்றும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் மற்றொரு திருமணத்தில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் உறவினர்களை அழைத்து கதறி அழுத மணப்பெண் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று சொல்வதெல்லாம் உண்மை டெம்லேட்டை போட்டு பலரும் காய்த்தும் வருகின்றனர். இந்த இரு வீடியோக்களும் எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியாத போதிலும் பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.