துணை முதல்வர் மனைவி மீது அவதுாறு பரப்பிய பெண் கைது| Dinamalar

மும்பை,:மஹாராஷ்டிராவின் துணை முதல்வர் மனைவி குறித்து, சமூக வலைதளத்தில் அவதுாறு கருத்து பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, துணை முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் பதவி வகிக்கிறார். இவரது மனைவி அம்ருதா பட்னவிசின் சமூக வலைதள பக்கத்தில், ஸ்மிருதி பஞ்சால், 50, என்ற பெண் அவதுாறான கருத்துகளை பதிவிட்டு வந்தார்.

இது குறித்து, மும்பை மாநகர சைபர் கிரைம் போலீசில் அம்ருதா புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார் ஸ்மிருதியை நேற்று கைது செய்தனர். ‘ஸ்மிருதி, ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் 53 போலி கணக்குகளும், ‘ஜி — மெயிலில்’ 13 கணக்குகளும் வைத்துள்ளார்’ என போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.