தெலுங்கானாவில் உள்ள புலிக்கு தமிழகத்தில் முறம் வீசுகிறார் தமிழிசை : மீண்டும் விமர்சித்த தி.மு.க

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியான விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜன் தன்னை யாரும் அவமதிக்கவும் இல்லை தான் அவமானப்படவும் இல்லை என்று கூறியுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில்தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜன் வெளியிட்டது பேட்டி அல்ல சில ஆளுனர்களுக்கு சொன்ன பாடம் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அப்பாவியாக இருப்பதாகவும், பேட்டி தரும்போது சில செய்திகளை சூசகமாக தெரிவிக்காமல் வெளிப்படையாக போட்டு உடைத்துவிட்டார்.

மக்களால் தேர்தடுக்கப்பட்ட அரசாங்கத்தற்கு எதிராக அரசியல் நோக்கத்தோடு ஆளுனர் செயல்படுவதாக கடுமயாக விமர்சனம் செய்திருந்ததது. மேலும் தெலுங்கான அரசு குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி தமிழிசை சௌந்திரராஜன் வெளியிட்ட பேட்டி சில ஆளுனர்களுக்கு சொல்லும் பாடம் என்று முரசொலியில் குறிப்பிட்டிருந்தது.

தற்போது இதற்கு பதிலடி கொடுத்துள்ள தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜன், தனது ‘வீரம்’ பேச்சை கேலி செய்வதாகவும் கூறிய தி.மு.க. “தெலுங்கானாவில் இருந்து பயந்து ஓடிப்போய் தமிழ்நாட்டில் தற்காத்துக் கொள்வது தைரியமா” கேட்கப்பட்டது. ஆனால் நான்  எதற்கும் அசையவில்லை என்றும், வீரம் மிக்க தமிழ்ப் பெண்களின் வீரம் மிக்க தமிழ்ப் பாரம்பரியத்தைப் பெற்றவர். ‘முரசொலி’, பயந்து போய் தெலுங்கானாவை விட்டு ஓடிப்போவது என்ன வீரம் என்று கூறியுள்ள அவர், தான் இங்கே தைரியமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

மேலும் “நான் ஒருபோதும் அவமதிக்கப்படவில்லை. தமிழ்நாட்டுல இருக்கிற ஒருவர் இன்னொரு மாநிலத்தில் தங்கைக்கு அவமரியாதை நடந்தால் எப்படி செய்வார்களா என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. இது சரியான மனநிலையல்ல,” என்று கூறியுள்ளார்.

தெலுங்கானா ஆளுனரின் இந்தக் கருத்துக்கு, தற்போது பதில் கொடுத்துள்ள தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி வெளியிட்டுள்ள செய்தியில், ஐதராபாத்தில் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறவில்லை என்றும், இது குறித்து அவர் கூறியுள்ள ஊடக அறிக்கைகளையும், யூடியூப்பில் கிடைத்த வீடியோ காட்சிகளை மேற்கோள் காட்டி, அவர் “அவமானப்படுத்தப்பட்டவர்” என்பதைக் குறிக்கும் ஒரு வார்த்தையை பயன்படுத்தியதாகவும் இதில் சந்தேகம் இருந்தால் அதை பார்த்து தெரிந்துகொள்ளலாமே என்றும் கூறியுள்ளது.

மேலும் புலியை முறத்தால் அடித்த பரம்பரை என்று தமிழிசை கூறியது குறித்து, புலி தெலுங்கானாவில் உள்ளது ஆனால் அவர் தமிழ்நாட்டிற்கு வந்து முறத்தை வீசுவதில் என்ன வீரமோ என்று கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.