தொழு நோய் சமூகத்தில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொழு நோய் தடுப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
இந்த ஆண்டில் (2022) மாத்திரம் ஐநூற்று ஐம்பத்து ஏழு(557) நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 85பேர் அடையாளம்; காணப்பட்டுள்ளார்கள். அதில் 25 வீதமானவர்கள் சிறுவர்கள் என வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் அடையாளங்காணப்படாக தொழு நோயாளர்கள் தற்போது சமூகத்தில் இருக்கின்றனர் சுமார் ஐயாயிரம் நோயாளர்கள் இவ்வாறு மறைந்திருப்பதாகவும் தொழு நோய் தடுப்புத் திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்தார். அத்துடன் கடந்த வருடங்களில் வருடாந்தம் சுமார் இரண்டாயிரம் தொழு நோயாளர்கள் வரை சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தொழு நோய்க்காக வைத்தியசாலைகளில் மருந்துகள் வழங்கப்படுவதாகவும் தொழு நோய் தடுப்புத் திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விசேடமாக தொழு நோய் மற்றொருவருக்கு சுவாசத்தினாலேயே தொற்றுவதாகவும் அதனால் அது தொடர்பாக கவனத்திற்கொள்வது மிக அவசியம் என வைத்தியர் தெரிவித்தார்;. ஐந்து வருடங்களுக்கு தொழு நோய் வைரஸ் உடம்பில் தேங்கியிருந்த பின்னரே வெளிப்படுவதாவும் வைத்தியர் பிரசாத் ரணவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.