நடிகை நோரோ பதேஹியிடம் டில்லி போலீசார் 8 மணி நேரம் விசாரணை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய 200 கோடி ரூபாய் மோசடி குறித்த வழக்கில், பாலிவுட் நடிகை நோரா பதேஹியிடம், டில்லி போலீசார் இன்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அரசியல் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி, டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி லீனாவும் கைது செய்யப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் டில்லி திஹார் சிறையில் இருந்தபோது, உடன் இருந்த தொழில் அதிபருக்கு ஜாமின் பெற்றுத் தருவதாகக் கூறி, அவரது மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.

latest tamil news

இந்த வழக்கிலும் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது குறித்து, டில்லி பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, பாலிவுட் நடிகையர் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோருக்கு, சுகேஷ் சந்திரசேகர் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கியது தெரியவந்தது.

இது குறித்து, ஜாக்குலின், நோரா பதேஹி ஆகியோர் மீது பணம் கேட்டு மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று முறை சம்மன் அனுப்பிய நிலையில், நேற்று டில்லி போலீசார் முன் ஜாக்குலின் ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மற்றொரு நடிகையான நோரா பதேஹியிடம் பண மோசடி வழக்கில் கடந்த 3-ம் தேதி அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து இன்று பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் டில்லி போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.