சென்னை:
நடிகர்
தனுஷ்
நடித்திருந்த
திருச்சிற்றம்பலம்
திரைப்படத்தில்
ரேவதி
நடித்திருந்தார்.
தமிழ்,
தெலுங்கு,
மலையாளம்,
கன்னடம்,
ஹிந்தி
என்று
பல
மொழிகளில்
பிசியாக
நடித்துக்
கொண்டிருக்கிறார்
ரேவதி.
இவர்
சமீபத்தில்
கொடுத்துள்ள
பேட்டியில்
இயக்குநர்கள்
பாரதிராஜா,
பாலச்சந்தர்,
கமலஹாசன்
உள்ளிட்டவர்களைப்
பற்றி
சுவாரசியமான
சம்பவங்களை
கூறியுள்ளார்.
பாரதிராஜா
ஸ்கூல்
மண்வாசனை
திரைப்படத்தில்
பாரதிராஜாவால்
அறிமுகம்
செய்யப்பட்டு
அவருடைய
படங்களில்
தொடர்ச்சியாக
நடித்தார்.
அதன்
பின்னர்
புன்னகை
மன்னன்
திரைப்படத்தில்
பாலச்சந்தர்
இயக்கத்தில்
நடித்திருந்தார்.
பாரதிராஜா
மற்றும்
பாலச்சந்தர்
இரண்டு
ஸ்கூலும்
உங்களுக்கு
எப்படி
இருந்தது
என்ற
கேள்விக்கு,
என்னை
பொறுத்த
வரை
நான்
முழுக்க
முழுக்க
பாரதிராஜா
ஸ்கூல்தான்.
பாலச்சந்தர்
இயக்கத்தில்
நடித்தது
இன்னொரு
அனுபவமாக
இருந்தது.
ஆனால்
என்னை
முழுமையாக
செதுக்கியது
இயக்குநர்
பாரதிராஜா
என்று
தனது
குருநாதரை
வாழ்த்தியுள்ளார்.
இங்கிலீஷ்
மணி
ரேவதி
கான்வென்ட்
ஸ்கூலில்
படித்திருந்ததால்
அங்கு
பெரும்பாலும்
ஆங்கிலம்தான்
பேசுவார்களாம்.
திரைத்துறையில்
முதன்முதலில்
தன்னிடம்
ஒரு
படத்தினுடைய
கதையை
முழுமையாக
ஆங்கிலத்தில்
கூறியவர்
இயக்குநர்
மணிரத்தினம்தானாம்.
அவர்
ஆங்கிலத்தில்
கதை
கூறியபோது
தனக்கு
மகிழ்ச்சியாக
இருந்ததாக
ரேவதி
கூறியுள்ளார்
தேவர்
மகன்
நடிகர்
சிவாஜி
கணேசனுடன்
மூன்று
படங்களில்
நடித்துள்ள
ரேவதி
தேவர்
மகன்
திரைப்படத்தில்
அவருடன்
சேர்ந்து
அந்தப்
படத்தில்
ஒரு
காட்சியில்
நடிக்க
கூடிய
வாய்ப்பு
அமையவில்லை
என்று
வருத்தம்
தெரிவித்துள்ளார்.
இருப்பினும்
எந்த
நடிகருடனும்
நடிக்க
பயப்படாத
நான்
சிவாஜியுடன்
ஒரு
படத்தில்
முதன்
முதலில்
நடித்த
போது
மிகவும்
பயந்ததாகவும்
அன்று
பாடல்
காட்சி
எடுத்ததால்
தப்பித்து
விட்டேன்
எனவும்
ரேவதி
கூறியுள்ளார்.
கமலுடன்
நடனப்
போட்டி
வைதேகி
காத்திருந்தாள்
திரைப்படத்தில்
பரத
நாட்டிய
கலைஞராக
ஒரு
பாடலில்
ஆடியிருப்பேன்.
ஆனால்
முழு
நடன
திறமையும்
காட்டுவதற்கு
களமாக
அமைந்த
படம்
புன்னகை
மன்னன்தான்.
பாலச்சந்தர்
முதன்
முதலில்
தன்னிடம்
பேசியபோது
நடனம்
ஆடிக்
காட்டச்
சொன்னாராம்.
கவிதை
கேளுங்கள்
பாடலை
மட்டும்
கிட்டத்தட்ட
ஐந்து
நாட்கள்
படம்
பிடித்துள்ளார்கள்.
காலகாலமாக
வாழும்
பாடலில்
கமலுடன்
சேர்ந்து
ஆட
வேண்டும்
என்பதால்
அவருக்கு
நிகராக
டஃப்
கொடுக்க
வேண்டும்
என்று
அந்தப்
படத்தில்
துணை
டான்ஸ்
மாஸ்டராக
பணிபுரிந்த
பிருந்தாவிடம்
கூறி
ரிகர்சல்
ஆரம்பித்தாராம்.
ரேவதி
ரிகர்சலில்
ஈடுபடுகிறார்
என்று
தெரிந்தவுடன்
தானும்
போட்டி
போட
வேண்டும்
என்று
மூன்றாவது
நாள்
அவருடன்
இணைந்து
ரகசலில்
ஈடுபட்டாராம்
கமல்.
நடிப்பில்
கூட
ரிகர்சல்
பார்த்துவிட்டு
தான்
நடிக்க
வேண்டும்
என்று
கமல்
அவர்கள்
பலமுறை
கூறியுள்ளது
குறிப்பிடத்தக்கது.