“ நாற்பதும் நமதே, நாடும் நமதே..!”- முப்பெரு விழாவில் ஸ்டாலின் பேச்சு..!

சார்பில் விருதுநகரில் முப்பெரு விழா நடை பெற்று வருகிறது . அப்போது கட்சிக்காக உழைத்தவர்களை சிறப்பிக்கும் விதமாக திமுக சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது . தமிழக முதல்வர்

இதில் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார் .

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் ““கழக அடையாளமாய் கறுப்பு-சிவப்பு பார்டர் வைத்து வேஷ்டி தயாரித்தவர் அம்மையார் சம்பூர்ணம் சாமிநாதன். இவரைப் போல 10 சம்பூர்ணம் இருந்தால் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது என்று கலைஞரே பாராட்டி இருக்கிறார். அவருக்கு பெரியார் விருது அளிப்பது மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது.

சென்னை மாவட்டத்தில் தி.மு.கவை சிங்கம் போல வழிநடத்தியவர் டி.ஆர்.பாலு. தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்ல, இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் தி.மு.க குரலை ஓங்கி ஒலிப்பவர். அவருக்கு கலைஞர் விருது அளிப்பது சரியான தேர்வு என நினைக்கிறேன்.
நான் இளைஞரணி செயலாளராக இருந்தபோது, என்னை அழைத்துவந்து விருதுநகர் மாவட்டத்தில் கிராமம் கிராமமாக அழைத்துச்சென்று கழகக்கொடி ஏற்ற வைத்த பெருமை குன்னூர் சீனிவாசனுக்கு உண்டு.
ரத்தம், வியர்வை, உழைப்பை கொடுத்து இந்த இயக்கத்தை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். உங்கள் தொண்டுக்கான பாராட்டு அல்ல இது. எங்களின் நன்றியை காட்டுவதற்கான விழா. நீங்கள் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
அதுமட்டுமல்லாது 4,041 கடிதங்கள்.. 21,500 பக்கங்கள் – கலைஞரின் கடிதங்கள் தொகுப்பு நூலில் உள்ளது. உலகத்தில் இத்தனை ஆயிரம் பக்கங்கள் எழுதிய ஒரே தலைவர் கலைஞராகத்தான் இருக்க முடியும். இந்த நேரத்தில் சண்முகநாதன் இல்லையே என்கிற ஏக்கம் என்னை ஆட்கொள்கிறது.
திராவிடம் என்பது ஒரு காலத்தின் இடத்தின் பெயராக, இனத்தின் பெயராக, மொழியின் பெயராக இருந்தது. இன்று அது ஒரு அரசியல் கொள்கையாக இருக்கிறது.

“உயர்ந்தவர் தாழ்ந்தவர் – ஆரிய மாடல். எல்லாருக்கும் எல்லாம், அனைவரும் சமம் – இது திராவிட மாடல். மேலும் சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், இன உரிமை, மொழிப்பற்று, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் சேர்க்கையே திராவிட மாடல் ஆகும்.
இந்திய அளவிலான தனிநபர் வருமானத்தை விட, தமிழகத்தில் தனிநபர் வருமானம் அதிகம். கல்வி, கல்லூரி, மருத்துவம் என அனைத்திலும் தமிழகம் முன்னோடி. இதுதான் திராவிட மாடல் வளர்ச்சி. இதைத்தான் பெரியார் கனவு கண்டார். அண்ணா, கலைஞர் செய்துகாட்டினார்கள். அந்த கடமை இப்போது என் தோளில் சுமத்தப்பட்டுள்ளது.
தொண்டர்களால் ஆனவன் நான். லட்சோபலட்சம் தொண்டர்களின் உதிரத்தால் உருவானன் நான். ஆட்சியில் அமர்ந்திருப்பது தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல, உடன்பிறப்புகளால் ஆட்சியில் உட்காரவைக்கப்பட்டு இருக்கிறேன்.
ஒற்றைத்தன்மையையும், இந்தி திணிப்பையும் நம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜி.எஸ்.டி, நீட் தேர்வுகள் மூலம் நம் நிதி, கல்வி உரிமை பறிக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் சட்டங்கள் அனைத்தும் மக்கள் விரோத போக்கையே கொண்டுள்ளன.
ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப்பார்க்கிறார்கள். இவற்றைத் தடுக்க நாடாளுமன்றத்தில் 40 உறுப்பினர்கள் இருந்தாக வேண்டும். அதற்கான களப்பணிகளை இப்போதே தொடர வேண்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே !” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.