வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: 2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் பாஜக அல்லாத கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்” என்று ஐக்கிய ஜனதா தள தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்
பாட்னாவில் செய்தியாளருக்கு நிதிஷ் குமார் அளித்த பேட்டி: 2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில், பாஜக அல்லாத கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். புவியியல் ரீதியாகவும், சமூக பொருளாதார ரீதியாகவும் முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் மேம்பாட்டிற்காக சிறப்பு அந்தஸ்து வழங்கும் முறை 1969ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம், இந்த மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் வரி வருவாய், வளர்ச்சித் திட்டங்கள், அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை பெற்று வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்கள்:
முதலில் அசாசம், நாகலாந்து, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. 1974 – 1979 காலகட்டத்தில் இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுா ஆகிய 5 மாநிலங்கள் இதில் சேர்க்கப்பட்டன. ஆந்திரா, பீஹார், ஒடிசா, ராஜஸ்தான், கோவா உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்தை கோரி வருகின்றன.
இதனையடுத்து 1990-ல் அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய இரு மாநிலங்கள் சேர்க்கப்பட்டன. 2001-ல் உத்தராகண்ட்டிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன்மூலம், நாட்டில் தற்போது 11 மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement