மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகக் கூறிய பாகிஸ்தானுக்கு தாலிபன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய பொய்கள் இருதரப்பு உறவை பாதிக்கும் என்று தாலிபன் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மும்பைத் தாக்குதல் வழக்கில் தேடப்படும் முக்கியக் குற்றவாளியான மசூத் அசாரை ஐநாவும் தீவிரவாதியாக பட்டியலிட்டு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் தாலிபன் அரசுக்கு எழுதிய கடிதத்தில் மசூத் அசார் நங்கர்ஹார் எனுமிடத்தில் பதுங்கியிருப்பதாக தெரிவித்திருந்தது.
இதனை மறுத்துள்ள ஆப்கானிஸ்தான் தாலிபன் வெளியுறவு அமைச்சகம், ஆதாரமற்ற இத்தகைய தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும், மற்றநாடுகளுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய நபர்களையும் குழுக்களையும் ஆப்கான் அரசு அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளது.