மன உளைச்சலால் விபரீதம்.. வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை..!

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சேலையூர் ராஜா அய்யர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (73). இவருடைய மனைவி கங்காதேவி (63). இந்த தம்பதிக்கு ஜெயக்குமரன் என்ற மகன் உள்ளார்.

இவருக்கு திருமணமாகி ஆஷாதேவி என்ற மனைவி உள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

முதியவர் ஆனந்தன் பார்வை குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவருடைய மனைவி கங்காதேவி முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வயது முதிர்வு, உடல்நிலை குறைபாடு காரணமாக தம்பதிகள் உறவினர்களை பார்க்க முடியாமலும், வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமலும் இருந்ததால் மன உளச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மகன் ஜெயக்குமரன் வழக்கம்போல நேற்று வேலைக்கு சென்று விட்டார். மாலை அவர்கள் மருமகள் ஆஷாதேவி குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர சென்றுள்ளார்.

அப்போது, வீட்டில் தனியாக இருந்த ஆனந்தன் மற்றும் கங்காதேவி இருவரும் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

வீட்டிற்கு திரும்பி வந்த மருமகள் ஆஷாதேவி மாமனார், மாமியார் இருவரும் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.