ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 141 பயணிகள் மற்றும் நான்கு கைக்குழந்தைகளுடன் உள்ளூர் நேரப்படி காலை 11.20 மணிக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, மற்றொரு விமானத்தின் பணியாளர்கள் என்ஜினில் இருந்து புகை வருவதாகத் தெரிவித்தனர்.
மஸ்கட்டில் இருந்து கொச்சி செல்லும் IX 442 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் என்ஜின் ஒன்றில் இருந்து புகை வருவதைக் கண்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 141 பயணிகள் மற்றும் நான்கு கைக்குழந்தைகளுடன் உள்ளூர் நேரப்படி காலை 11.20 மணிக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, மற்றொரு விமானத்தின் பணியாளர்கள் என்ஜினில் இருந்து புகை வருவதாகத் தெரிவித்தனர்.
பின்னர், விமானத்தை ஓடுபாதையில் நிறுத்திவிட்டு, உள்ளே இருந்த என்ஜினில், தீயை அணைக்கும் கருவிகளை இயக்கிய ஊழியர்கள், அவசர வழியைப் பயன்படுத்தி பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பயனிகளை அவசரமாக மீட்கும் பணியின்போது, சில பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. மேலும், ஒரு பெண் பயணி விமான நிலையத்தில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓமனின் மஸ்கட் விமான நிலையத்தில் புதன்கிழமையன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மஸ்கட்-கொச்சின் விமானத்தின் எஞ்சின் ஒன்றில் புகை மற்றும் தீ பரவியதால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்தில் இருந்து இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பயணிகள் விமான நிலைய முனைய கட்டிடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மும்பை-துபாய் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மஸ்கட் சென்று சிக்கித் தவிக்கும் பயணிகளை உள்ளூர் நேரப்படி இரவு 9.20 மணிக்கு கொச்சிக்கு அனுப்பும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வட்டாரம் கூறுகையில், புகை அலாரங்கள் ஒலிக்கவில்லை என்றும், விமானி அறையில் தீ எச்சரிக்கை அறிகுறி எதுவும் இல்லை என்றும் கூறினார். “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பின்னால் இருந்த விமானத்தில் இருந்து வந்த ஊழியர்கள் புகையைக் கண்டு எச்சரித்தனர். என்ஜினில் இருந்த சில வீணாண பொருட்கள் காரணமாக புகை வெளியாகி இருக்கலாம்” என்று தெரிவித்தனர்.
விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அருண்குமார் தெரிவித்தார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதன் உள்நாட்டு நிர்வாகம் மற்றும் ஆதரவு ஊழியர்கள் மஸ்கட்டில் விருந்தினர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகத் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விமான நிறுவனத்தின் விமானப் பாதுகாப்புத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது என்று தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“