மின்கட்டணத்தை தொடர்ந்து மக்களுக்கு அடுத்த ஷாக்… மாஜி அமைச்சரின் அலெர்ட்!

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 18மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில் மதுரையில் திமுக அமைச்சர் தனது மகனின் திருமணத்தை 1000ஆடுகள், 1000கிலோ கோழி கறி என 100கோடி ரூபாய் வரை செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணம் செய்துள்ளார். இதற்கு முதல்வரே தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்திருப்பது கொள்ளையடிக்க முதல்வர் முக ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டுவது போல் உள்ளதாக அதிமுக தொண்டர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுக பங்கேற்று அண்ணாவின் திருவுருவ படத்திற்கு தீபாராதனை காண்பித்து படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடினர்.

இதையடுத்து அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் தொழில்கள் நலிவடைந்து வரும் நிலையில் அரசின் மின் கட்டண உயர்வால் நலிவடைந்த தொழில்கள் மூடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறினார். திமுகவின் சொத்துவரி,மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வு தொடர்ந்து அடுத்த கட்டமாக பேருந்து கட்டணமும் திமுக அரசு உயர்த்த திட்டமிட இருப்பதால் திமுகவிற்கு வாக்களித்த மக்கள் ஏன் வாக்களித்தோம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக என்றார்.

மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், இலவச மடிக்கணினி தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிடும் என்று கூறிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 18 மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில் மதுரையில் திமுக அமைச்சர் மகனின் திருமணத்தை 1000ஆடுகள், 1000கிலோ கோழி கறி என 100கோடி ரூபாய் வரை செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணம் செய்துள்ளார்.

இதற்கு முதல்வரே தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்திருப்பது கொள்ளையடிக்க முதல்வர் முக ஸ்டாலின் கொள்ளையடிக்க பச்சைக்கொடி காட்டுவது போல் உள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக அதிமுக சார்பில் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட லட்டு மற்றும் மிச்சர் பாக்கெட்டிற்காக தொண்டர்கள் ஒருவருக்கு ஒருவர் முந்தி சென்று வாங்கும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் வாக்குவாதம் செய்து கொண்டனர். ஓரே நேரத்தில் லட்டு பெட்டிக்குள் அனைவரும் கைவிட்டதில் லட்டு பூந்தியாக மாறியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.