மகாராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியின் பின்னால் அவர் மகனான மன்னர் சார்லஸ் நடந்து செல்வதை இளவரசி டயானா பார்ப்பது போன்ற வீடியோ வைரலாகியுள்ளது.
மறைந்த எலிசபெத் மகாராணியின் உடல் கடந்த 12ஆம் திகதி எடின்பர்க்கின் ராயல் மைல் தெருக்களில் எடுத்து செல்லப்பட்டது.
சவப்பெட்டிக்கு பின்னால் மன்னர் சார்லஸும் நடந்து சென்றார்.
அப்போது அங்குள்ள ஒரு சுவற்றில் இளவரசி டயானாவின் புகைப்படம் ஜொலித்தது.
அதாவது அவர் நடந்து செல்லும் சார்லஸை பார்ப்பது போலவே இருந்தது, ஆனால் சார்லஸ் டயனாவின் புகைப்படத்தை பார்க்கவில்லை.
yahoo
இந்த வீடியோவை Cameron Stewart (26) என்ற இளைஞர் தான் வீட்டின் ஜன்னல் வழியாக எடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், இது வரலாற்றில் மிகப் பெரிய தருணம். நான் டயனாவின் புகைப்படத்தை அங்கு பார்த்தேன், அவர் சார்லஸ் மற்றும் ராணியின் உடல் எடுத்து செல்லப்படும் சவப்பெட்டியை பார்ப்பது போலவே இருந்தது.
அந்த சூழல் விசித்திரமாக இருந்தது, ஏனெனில் அனைவரும் மரியாதையுடன் அமைதியாக சென்றனர் என கூறியுள்ளார்.
சார்லஸ் மற்றும் டயானா 1981 இல் திருமணம் செய்து கொண்ட நிலையில் 1996ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதற்கு அடுத்த ஆண்டே டயானா கார் விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.