ராணி மரணத்தை தொடர்ந்து இளவரசர் வில்லியம் கைக்கு வந்த பல கோடி மதிப்புள்ள சொத்து… ஹரிக்கு இல்லை!


ராணியார் மரணத்தை தொடர்ந்து வில்லியம் வசம் சென்ற பல கோடி மதிப்புள்ள எஸ்டேட்.

எஸ்டேட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் பொது, தனியார் மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

பிரித்தானிய ராணியார் மரணத்தை தொடர்ந்து வேல்ஸ் இளவரசர் வில்லியம் வசம் $1.2 பில்லியன் மதிப்புள்ள பழங்கால எஸ்டேட் சென்றுள்ளது. இதன்மூலம் புதிய சொத்து அவருக்கு வந்துள்ளது.

அரச உயில்கள் மற்றும் சொத்துக்கள் ஒருபோதும் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை என்றாலும், நிதி வல்லுனர்கள் அது தொடர்பான தகவல்களை தொடர்ந்து மதிப்பீடு செய்கின்றனர்.

அந்த வகையில் ராணியார் மரணத்தை தொடர்ந்து Duke of Cambridge என இதுவரை அறியப்பட்டு வந்த இளவரசர் வில்லியம் இனிமுதல் Duke of Cornwall என அறியப்படுவார். மட்டுமின்றி, வேல்ஸ் இளவரசர் எனவும் அறியப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

ராணி மரணத்தை தொடர்ந்து இளவரசர் வில்லியம் கைக்கு வந்த பல கோடி மதிப்புள்ள சொத்து... ஹரிக்கு இல்லை! | Duke Of Cornwall William Inherits Ancient Estate

yahoo

அதன்படி Duke of Cornwall என்ற பட்டத்தை பெற்றுள்ளதால் மூன்றாம் எட்வர்ட் மன்னரால் உருவாக்கப்பட்ட $1.2 பில்லியன் மதிப்புடைய எஸ்டேட் தற்போது வில்லியம் கைக்கு வந்துள்ளது.

இதில் இருந்து கிடைக்கும் வருவாய் Duke of Cornwall-ன் பொது, தனியார் மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
தற்போது அந்த பட்டம் வில்லியமிடம் உள்ளதால் பாரம்பரியம் மிக்க எஸ்டேட் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அவரின் சகோதரரான ஹரிக்கு இதில் எந்தவொரு பங்கும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.