சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து விலை ஏறி வருவது, நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்களுக்கு தங்களது மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் செலவாகி வருகிறது.
இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இண்டேன் கேஸ் நிறுவனமும் காம்போசிட் எரிவாயு சிலிண்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த காம்போசிட் எரிவாயு சிலிண்டர்கள் வீட்டு பயன்பாட்டுக்காக மட்டும் தான் வழங்கப்படுகிறது.
சிலிண்டர் விலை இன்று முதல் குறைப்பு.. ஆனா இல்லத்தரசிகள் சோகம்..!
எடை
காம்போசிட் சிலிண்டர் தற்போது பயன்பாட்டில் உள்ள 14.2 கிலோ சிலிண்டர்களை விட சற்று எடை குறைவாக இருக்கும். இதில் 10 கிலோ எடைக் கொண்ட எரிவாய் நிரப்பப்பட்டு இருக்கும். மேலும் இதில் எவ்வளவு எரிவாய் இருக்கும் என்பதையும் பார்க்க முடியும். 5 கிலோ எடையிலும் இந்த சிலிண்டர் கிடைக்கிறது.
பயன்
காபோசிட் எரிவாயு சிலிண்டர் தற்போது உள்ளது போல இரும்பில் இருக்காது. அது ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்ட உருளைகளாக வரும். எனவே இதன் எடை குறைவாக இருக்கும். சில இடங்களில் கண்ணாடி போல இருக்கும். பழைய சிலிண்டர்கள் போல அழுக்காகாது. இந்த சிலிண்டர்கள் உறுதியானது மற்றும் பாதுகாப்பானது.
எங்கு எல்லாம் இந்த சிலிண்டர் கிடைக்கும்?
காம்போசிட் சமையல் எரிவாயு சிலிண்டர் இப்போது சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 28 நாரங்களில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இந்த சிலிண்டர் சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்ய இண்டேன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மானியம் உண்டா?
10 கிலோ எடைக்கொண்ட காம்போசிட் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் கிடையாது. 5 கிலோ எடைக் கொண்ட காம்போசிட் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும்.
டெபாசிட் கட்டணம் எவ்வளவு?
காம்போசிட் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங விரும்புபவர்கள் அதற்கு என தனியாக டெபாசிட் கட்டணம் செலுத்த வேண்டும். 10 கிலோ சிலிண்டருக்கு 3350 ரூபாயும், 5 கிலோ சிலிண்டருக்கு 2150 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
பழைய சிலிண்டரை மாற்ற முடியுமா?
ஏற்கனவே இண்டேன் சமையல் எரிவாய் இணைப்பை பெற்றுள்ளவர்கள் பழைய ஸ்டீல் சிலிண்டர்களை திருப்பு ஒப்படைத்துவிட்டுக் கூடுதல் கட்டணம் செலுத்தி காம்போசிட் சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளலாம்.
வீட்டிற்கு டெலிவரி செய்ய முடியுமா?
இண்டேன் விநியோகஸ்தர்கள் மூலம் ஏற்கனவே உள்ள எரிவாயு சிலிண்டரைப் போலவே காம்போசிட் சிலிண்டரும் உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும்.
விலை
14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சிலிண்டர் இப்போது 1000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த 10 கிலோ எடைகொண்ட சிலிண்டர் இப்போது 750 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் விலையும் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது.
How To Get Indian Oil Composite Cylinder
How To Get Indian Oil Composite Cylinder