“வன்முறைக்கெதிரான வெற்றி” செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

“வன்முறைக்கெதிரான வெற்றி” செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (15) திகதி மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

தேவை நாடும் மகளீர் (Women In Need) இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான அனைத்துவிதமான வன்முறைகளையும் இல்லாதொழிக்கும் நோக்கில் கடந்த 3 தசாப்தங்களாக செயற்பட்டு வருகின்றது. உளவியல், மனநல ஆலோசனை, சட்ட உதவி, அவசரகால தங்குமிட வசதிகள் மற்றும் 24 மணிநேர துரித தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கிப் பணியாற்றுகிறது.

தேவை நாடும் மகளீர் ·(WIN), USAID இன் நிதியுதவியின் மூலம் “வன்முறைக்கு எதிரான வெற்றி” செயற்திட்டத்தின் ஊடாக பாலியல் பால் நிலைக்கெதிரான வன்முறைகளை இனங்கண்டு அவற்றை வெற்றிக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ள நிலையில் இந்த செயற்றிட்டத்தின் ஊடாக, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்கவும், மாவட்ட, பிராந்திய மற்றும் தேசிய ரீதியில் செயற்படுவதற்கான நான்காண்டுகாலப் பயணத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

இச் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் மற்றும் திருமதி.நவரூப ரஞ்ஜினி முகுந்தன் ஆகிய இருவரும் கலந்துகொண்ட நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி பாரதி கெனடி, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் ந.பிரபாகரன், விசேட உளநல வைத்திய நிபுணர் த.கடம்பநாதன், மாவட்ட சிறுவர் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி சந்துனி எதிரிசிங்க, பிராந்திய சுகாதார பணிமனையின் வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய துறைசார் அதிகாரிகளும், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து சிறப்பித்ததுடன், தமது ஆலோசனையினையும் தெரிவித்தனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.