உக்ரேனிய அதிபர் வாகனம் கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்து. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் போர்க்களத்தில் உள்ளராணுவ வீரர்களை சந்தித்துவிட்டு திருப்பிக்கொண்டிருந்த நிலையில் அவர் கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
அதிபர் வாகனம் மீது பயணிகள் வாகனம் மோதியதாக அவரது செய்தித் தொடர்பாளர் செர்ஜி நிகிபோரோவ் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் பரிசோதித்தபோது பலத்த காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் வாகனத்தின் ஓட்டுநர் மருத்துவக் குழுவிடமிருந்து முதலுதவி பெற்று ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார், என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விபத்து குறித்து சட்ட அமலாக்க அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்துவார்கள் என்று செய்தி தொடர்பாளர் கூறினார். இது குறித்து அவர் பேசுகையில் “ரஷ்யாவால் ஆறு மாத காலமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இசுயம் நகரை உக்ரைன் படைகள் கடந்த சனிக்கிழமை மீண்டும் கைப்பற்றின. உக்ரைன் படைகள் இசுயம் நகரை கைப்பற்றியதைத் தொடர்ந்து ரஷ்ய படைகள் பின்வாங்க துவங்கியுள்ளது.
உக்ரைன் படைகள் கார்கிவ் பகுதி வழியாக கிழக்கு நோக்கி தாக்குதலைத் தொடங்கிய ஐந்து நாட்களுக்குப் பிறகு ரஷ்யப் படைகள் ஆயுதங்கள், வெடிமருந்துகளை போட்டுவிட்டு உக்ரைனின் கிழக்கு பகுதியை காலி செய்தன என்று உக்ரைன் தரைப்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ரஷ்யாவிடம் இருந்துமீண்டும் கைப்பற்றப்பட்ட நகரமான இசுயத்தில் ராணுவ வீரர்களை சந்தித்துவிட்டு திரும்புகையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” எண்டு தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் கார் விபத்துக்கு உள்ளான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது