டெல்லி: மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்து, 12.41% ஆக குறைந்துள்ளது.
இது 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இந்த மொத்த விலை பணவீக்கமானது கடந்த ஜூலை மாதத்தில் 13.93% ஆக இருந்தது. இதே கடந்த மே மாதத்தில் அதிகபட்சமாக 15.88% ஆக உச்சம் எட்டியிருந்தது.
கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலும் 11.64% என்ற இரட்டை இலக்கினை தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது மட்டும் நடந்தா போதும்.. பல பொருட்கள் விலை குறையும்.. அனில் அகர்வால் செம அப்டேட்!
WPI பணவீக்கம் சரிவு
கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் இரட்டை இலக்கில் இருந்தாலும், இது முந்தைய மாதங்களோடு ஒப்பிடும்போது கணிசமான குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உணவு பொருட்கள் மீதான பணவீக்க விகிதமானது கடந்த ஜூலை மாதம் 10.77% ஆக பதிவாகி இருந்த நிலையில், அது ஆகஸ்ட் மாதத்தில் 12.37% ஆக உச்சம் தொட்டுள்ளது. எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் 43.75% ஆக இருந்த விகிதமானது, ஆகஸ்டில் 33.67% ஆக குறைந்துள்ளது.
காய்கறிகளின் விலை
இதே காய்கறிகளின் விலையானது 22.29% ஆக உச்சம் தொட்டுள்ளது. எனினும் இது இன்னும் ஆய்வில் உள்ளதாக கூறப்படுகின்றது. இது கடந்த ஜூலை மாதத்தில் 18.25% ஆக இருந்தது.
எரிபொருள் & மின்சாரம்
குறிப்பாக எரிபொருள், மின்சாரம், உணவு உற்பத்தி, உணவு அல்லாத பொருட்கள் என பலவற்றின் விலையானது குறைந்திருந்தாலும், 17வது மாதமாக தொடர்ச்சியாக இரு இலக்கில் ஏற்றத்திலேயே கண்டுள்ளது.
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எண்ணெய் வித்துகள் விகிதமானது முறையே, 7.51% மற்றும் – 13.48% ஆகவும் மாற்றம் கண்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இலக்கு
ரிசர்வ் வங்கி குறிப்பாக சில்லறை பணவீக்க விகிதத்திற்காக இலக்கினை நிர்ணயம் செய்துள்ளது. இலக்கிற்குள்ளாக கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது தற்போது வரையிலும் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் இலக்கு 6% மேலாகவே இருந்து வருகின்றது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 7% ஆக வந்தது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பு
ஏற்கனவே ரிசர்வ் வங்கி பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க தனது ரெப்போ விகிதத்தினை மூன்று முறை அதிகரித்து, 5.40% ஆக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் சராசரி சில்லறை பணவீக்கம் என்பது 6.7% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
wholesale price index inflation dips in august to 11 month low of 12.4%
wholesale price index inflation eased for the third straight month to 12.41%. However till now inflation has been in the double digit