CBSE 2023 Board Exam: மத்திய இடைநிலைக் கல்வி வாரியதில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கான முக்கியமான அறிவிக்கை ஒன்று இன்று வெளியானது. நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், இன்று (2022, செப்டம்பர் 15) தனித் தேர்வர்களுக்கான விவரங்களை CBSE அறிவித்தது. CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15, 2023 முதல் நடைபெற உள்ளது. பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள், பள்ளிகளின் மூலமே விண்ணப்பிக்கலாம் என்பதால் அவர்களுக்கு தனியான அறிவிக்கை தேவையில்லை. ஆனால், தனியாக படித்து, பள்ளிக்கு செல்லாமல் பத்து மற்றும் பணிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்காக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தனியார் மாணவர்களுக்கான தேர்வைக் கருத்தில் கொண்டு பதிவு செய்யும் செயல்முறையை (CBSE Board Exam 2023 Registration) விரைவில் தொடங்க உள்ளது. தனியார் CBSE போர்டு தேர்வு 2023 (CBSE Board Exam 2023) க்கு பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.inஇல், விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வை CBSE வாரியம் 2023 பிப்ரவரி-மார்ச் மாதத்தில் நடத்துகிறது.
இந்த கல்வி ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட சிபிஎஸ் பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. பாடங்களை படித்து தேர்ந்த மாணாக்கர்கள், பத்து மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்களின் விருப்பத் தெரிவுகள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்வுக்கு பதிவு செய்ய, மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.
CBSE போர்டு தேர்வு 2023 க்கு பதிவு செய்யும் வழிமுறை
தேர்வில் கலந்து க்கொள்ள விரும்பும் மாணவர்கள், அதற்கு பதிவு செய்ய முதலில் cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
அதன் பிறகு, இணையதளத்தில் உள்ள பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
அடுத்த கட்டத்தில், படிவத்தில் கேட்கப்பட்ட தகவலைப் பூர்த்தி செய்யவும்.
கோரப்பட்ட தகவலை நிரப்பிய பிறகுக், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.
இப்போது விண்ணப்பக் கட்டணத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.