dmk mupperum vizha 2022: ஆரிய மாடல், திராவிட மாடல் என்ன வித்தியாசம்? – ஸ்டாலின் விளக்கம்!

பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள், திமுக தொடங்கப்பட்ட தினம் ஆகியவற்றை ஆண்டுதோறும் திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு முப்பெரும் விழா, விருது நகரில் இன்று நடைபெற்றது. விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது:

தமிழ்நாட்டில் நடைபெறுவது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல; ஒரு இனத்தின் ஆட்சி. காமராஜர் ஆட்சி. அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி என்ற வரிசையில் தற்போதைய ஆட்சியை ஸ்டாலி்ன் ஆட்சி என்று குறிப்பிடாமல் திராவிட மாடல் ஆட்சி என்று முதன்முதலில் நான் குறிப்பிட்டபோது அனைவருக்கும் வியப்பாக இருந்தது. ஆனால் இன்று இந்த திராவிட மாடல் ஆட்சி இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

திராவிடம் என்றால் எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் பொருள். ஆனால் இன்னாருக்கு கல்வியை கொடு; இன்னாருக்கு கொடுக்காதே. இன்னாரை கோயிலுக்கு விடு, இன்னாரை விடாதே என்பதுதான் ஆரிய மாடல். உயர்நதவர், தாழ்ந்தவர் என பிரி்ப்பதுதான் ஆரிய மாடல். எல்லாருக்கும் கல்வியை கொடு, எல்லாருக்கு வேலையை கொடு, எல்லாருக்கு அதிகாரத்தை கொடு, ஆணும், பெண்ணும் சமம் என்புதுதான் திராவிட மாடல். வர்த்தக பேதம், பாலின பாகுபாடு இல்லை என்பதுதான் திராவிட மாடல்.

தனிப்பட்ட ஸ்டாலினாக நான் ஆட்சி கட்டிலில் அமரவில்லை. உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு தொண்டர்களின் தலைமை தொண்டனாக நான் ஆட்சி செய்து வருகிறேன். இனி தமிழகத்தை நிரந்தரமாக ஆளப்போவது திமுகதான். இதற்கு கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், அமைச்சர்கள் என அனைவரும் கட்சியையும், ஆட்சியையும் இரண்டு கண்களாக கருதி செயல்பட வேண்டும்.

தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் கூட்டாட்சி தத்துவம், சமூக நீதி, மதசார்பின்மை உள்ளிட்டவற்றை நிலைநாட்ட வேண்டிய கடமை நமக்கு உள்ளது. வலிமையான மாநிலங்கள்தான் கூட்டாட்சி தத்துவத்தின அடிப்படை.. மிழகத்தை போன்று அனஐத்து மாநிலங்களும் வலிமை மிக்கவையாக, வளம் படைத்தவையாக இருக்க வேண்டும் என்பதே திமுகவின் அரசியல் கொள்கை.

ஜிஎஸ்டியால் மாநிலங்களின் நிதி உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. நீட், கல்விக் கொள்கையால் நமது உரிமை மறுக்கப்பட்டுவிட்டது. ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்த மத்திய அரசு முயன்று வருகிறது. இதனை தடுக்க 2024 மக்களவை தேர்தலிலும் திமுக வெற்றி கனியை பறித்து நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையை தக்க வைத்துகொள்ள வேண்டும். அதற்கு கழக தொண்டர்கள் இப்போதில் இருந்தே களப்பணி ஆற்ற வேண்டும். நாற்பதும் நமதே; நாளும் நமதே என்று முதல்வர் ஸ்டாலின் முழங்கினார்.

முன்னதாக விழாவில், கருணாநிதி தன் வாழ்நாளில் திமுக உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்களில் 4,041 மடல்களின் 54 தொகுப்புகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.