இந்தியா தற்போது டிஜிட்டல்மயமாகிய நிலையில் பலர் டிஜிட்டல் முறையில் தான் பண பரிமாற்றம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் பணப்பரிமாற்றம் செய்யும் வகைகளில் க்யூஆர் கோட் பயன்படுத்துவது ஒன்று என்பதும் இதனை அதிக நபர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் க்யூஆர் கோட்-ஐ பணம் அனுப்புவதற்கு பயன்படுத்தி கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஆனால் பணம் பெறுவதற்கு இதனை பயன்படுத்த வேண்டாம் என்று பாரத ஸ்டேட் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு, ரூ.3 லட்சம் கோடி இழப்பு..!
டிஜிட்டல் இந்தியா
டிஜிட்டல் இந்தியா என்பதை பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய பின்னர் நாடு முழுவதும் தற்போது டிஜிட்டல் முறையில் தான் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் பேங்க் நெட் பேங்கிங், யூபிஐ மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் ஏராளமான பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
க்யூஆர் கோட்
இந்த நிலையில் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்யும் வகைகளில் ஒன்று கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் அனுப்புவது மற்றும் பணம் பெறுவது என்பது குறிப்பிடதக்கது. கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு அந்த பொருளுக்கு உரிய மதிப்பை பணமாக கொடுப்பதற்கு பதில் க்யூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து நமது அக்கவுண்டில் இருந்து கடைக்காரரின் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பலாம். இந்த க்யூஆர் கோட் -ஐ அனைத்து வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ விழிப்புணர்வு
இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தற்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஒன்றை தெரிவித்துள்ளது. க்யூஆர் கோட் என்பது பணத்தை செலுத்துவதற்கு மட்டுமே ஸ்கேன் செய்யப்பட வேண்டும் என்றும் பணத்தை பெற்று கொள்ள இந்த கியூஆர் கோடு ஸ்கேன் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
மோசடி
செல்போன் மூலம் க்யூஆர் கோட்-ஐ ஒருசிலர் ஸ்கேன் செய்து அனுப்புவதாகவும், அவ்வாறு அனுப்பப்படும் க்யூஆர் கோட் மோசடியான நபர்களிடம் கிடைத்தால் உங்கள் வங்கியில் உள்ள மொத்த பணமும் காலியாக வாய்ப்புள்ளது என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. எனவே வங்கி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ள க்யூஆர் கோட்-ஐ பணம் செலுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்துங்கள் என்றும் பணம் பெறுவதற்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
வங்கி விவரங்களை தெரிவிக்க வேண்டாம்
அதேபோல் அறிமுகமில்லாத நபர்களிடம் உங்களுடைய வங்கி விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என்றும், பான் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்று ஸ்டேட் வங்கி பெயரில் அனுப்பப்படும் போலியான எஸ்எம்எஸ்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எந்த காரணத்தை முன்னிட்டும் தனிப்பட்ட தகவல்களை வங்கிகள் பகிருமாறு கேட்காது என்றும் இதுபோன்று வரும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்களுக்கு ஒருபோதும் பதில் அளிக்க வேண்டாம் என்றும் எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
State Bank of India warns customers not to scan QR Code to get money
State Bank of India warns to customerss not to scan QR Code to get money | க்யூஆர் கோட் மூலம் இதை செய்யாதீர்கள்.. செய்தால் அக்கவுண்ட் காலி.. எஸ்பிஐ எச்சரிக்கை